தைப்பூசம் - பால்காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

Update: 2021-01-28 09:00 GMT

அரியலூர் மாவட்டத்தில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பால்காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

அரியலூர் மாவட்டம் பெரம்பலூர் சாலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் பக்தர்கள் செட்டியேரிக்கரையில் இருந்து பால்காவடி, பால்குடம் ஆகியவற்றை சுமந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியே சென்றனர். கோவிலை அடைந்தவுடன் பக்தர்கள் எடுத்து வந்த பாலால் முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.

இதன் பிறகு சந்தனம், இளநீர், தேன், தயிர், திரவியப்பொடிகள் உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மலர் மாலைகளாலும், வெள்ளிக்கவசத்தாலும் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகா, வீரவேல் முருகா, முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டு முருகப்பெருமானை வழங்கி வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News