முககவசம் அணிவதில் அலட்சியம் கொரோனாவை வரவேற்கும் மக்கள்

mask is very must. no awarness in tamilnadu people.increasing corona virus

Update: 2022-07-19 07:26 GMT

முக கவசம்.

மூன்று அலைகளை தொடர்ந்து, நான்காவது அலை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், தமிழக மக்கள் அலட்சியம் காட்டுவது, தொற்றை வரவேற்பதாக உள்ளது.

நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா தொற்று, சமீப காலமாக மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெரிய நகரங்களில், இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்,  பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும்  38ஆயிரம் பேர் வரை, கொரோனா நோயால் இறந்துள்ளனர். இந்திய அளவில் 5லட்சம்  பேர் வரை பலியாகி உள்ளனர்.

பொது மக்கள் அனைவரும், வெளியிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். பாதுகாப்பான சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என, அரசு தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், துவக்கத்தில் இருந்த கொரோனா தொற்று குறித்த அச்சம், தற்போது மக்களிடம் வெகுவாக குறைந்து போய் விட்டது.தொற்று குறித்த அச்சம் ஏதுமின்றி பலரும் உள்ளனர். 

முக கவசம் அணிய கட்டாயப்படுத்தப்படும் இடங்களில் மட்டுமே அவர்கள் முக கவசம் அணிகின்றனர். மற்றபடி பெரும்பாலான மக்கள், முக கவசமின்றி பொது இடங்களில் வலம்வருகின்றனர். பஸ் ஸ்டாண்டுகள், சினிமா தியேட்டர்கள், பூங்கா பகுதிகள், கடை வீதிகள், வணிகவளாகங்கள், கோவில்கள் என பல்வேறு இடங்களில், முக கவசம் அணியாத மக்களே அதிகமாக தென்படுகின்றனர். மக்களிடம் தொற்று குறித்த அச்சம் இல்லாத, அலட்சிய போக்கு, தொற்றை வரவேற்று, அதிகளவில் பரவ செய்யும் ஆபத்தாய் முடியும். எனவே, பொது இடங்களில் முக கவசம் அணிவதை, மக்கள் கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே, தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும். 

Tags:    

Similar News