பிரதமரை சந்திப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் இன்று டில்லி செல்கிறார்

Update: 2021-06-16 01:02 GMT

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக ஸ்டாலின், இன்று பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேச உள்ளார். அதற்காக இன்று காலை, 7:20 மணிக்கு, தனி விமானத்தில் டில்லி செல்கிறார். அங்கிருந்து, தமிழ்நாடு அரசு இல்லம் செல்லும் அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மாலை, 5:00 மணிக்கு, பிரதமரை சந்திக்க போவதாகவும். அப்போது, தமிழக அரசு சார்பில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமரிடம் கொடுக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கிள்னறன. அத்துடன், அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசு திட்டங்களில் நடந்த, பல்வேறு ஊழல் தொடர்பான பட்டியலையும், பிரதமரிடம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.முதல்வருடன் அமைச்சர்கள் தியாகராஜன், சுப்பிரமணியன், தலைமை செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் செல்ல உள்ளனர்.

பிரதமரை சந்தித்த பிறகு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், முதல்வர் சந்தித்து பேச உள்ளார். மறுநாள் காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News