கனிமொழிக்கு நன்றி தெரிவித்த உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள்

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்

Update: 2022-03-27 07:17 GMT

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய நடத்தி வரும் தாக்குதலால் அங்கு மருத்துவம் உள்ளிட்ட பாடங்களில் படித்து வரும் ஏராளமான மாணவ/ மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய மாணவ மாணவிகள் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பியை சந்தித்து அவர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் தடைப்பட்ட தங்களின் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். 

Similar News