உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?

ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.

Update: 2024-05-14 06:15 GMT

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், வரும் ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., என எந்த கட்சிக்கு எத்தனை இடம் கிடைத்தாலும் பரவாயில்லை. தி.மு.க.,வே அமோக வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. அடுத்த கட்ட வேலைக்கு சென்று விடுவோம். இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் எதையும் கருத்தில் கொள்ள வேண்டாம் என தி.மு.க., மேலிடம் முடிவு செய்து விட்டதாம்.

தற்போது வெளிநாட்டில் ஓய்வெடுத்து வரும் அமைச்சர் உதயநிதி அங்கிருந்தே கட்சியினருக்கும், அரசு நிர்வாகத்திற்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறாராம். உதயநிதியின் இந்த வேகமும் செயல்பாடும் தி.மு.க., குடும்பத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாம். அமைச்சர் உதயநிதி அரசியலில் பெரிய அளவில் தேறி விட்டார். எனவே அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு புரோமோசன் கொடுக்கவும் தி.மு.க., மேலிடம் முடிவு செய்துள்ளதாம்.

உதயநிதியிடம் மிகவும் முக்கியமான துறைகள் வழங்கப்பட உள்ளன. துணை முதல்வர் பொறுப்பு கிடைக்கலாம். அல்லது அதற்கு இணையான மிகவும் வலுவான பொறுப்பு கிடைக்கலாம் என்று அறிவாலயத்தில் பேச்சு அடிபடுகிறது. ஆக ஜூன் மாதம் 4ம் தேதிக்கு பின்னர் மத்தியில் பெரிய மாற்றம் உள்ளதோ இல்லையோ. தமிழகத்தில் பெரிய மாற்றம் உள்ளது.

இந்த தேர்தலில் சரியாக வேலை பார்க்காத பல தலைகள் உருளும். பலருக்கு கிடுக்குப்பிடி போடவும் அறிவாலயம் முடிவு செய்துள்ளதாம். அதேபோல் அடுத்த சட்டசபை தேர்தலுக்கான பணிகளையும் தி.மு.க., தொடங்கி உள்ளதாம். இதற்காக ஏற்கனவே கோடிகளில் மூன்று டிஜிட்டில் சம்பளம் பேசி நியமிக்கப்பட்ட அதே அரசியல் ஆலோசகர் தான் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாராம்.

இந்த முறை அவர் தனது சம்பளத்தை மேலும் அதிகளவு உயர்த்தி விட்டாராம். இருந்தாலும் பரவாயில்லை. அவரது ஆலோசனைகள் எடுபடுகின்றன. எனவே அவரையே நியமித்து விடலாம் எனவும் கூறி பேசிய தொகையில் ஒரு பெரிய அளவு அட்வான்ஸ் கொடுத்து விட்டனராம். பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த அரசியல் ஆலோசகர் மீண்டும் தமிழகத்தில் தனது அலுவலகங்களை பரவலாக அமைத்து, பழைய குழுவை புதுப்பித்து தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறாராம்.

Tags:    

Similar News