மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
சீனாவின் கைக்கூலிகள் இந்தியாவில் செய்யும் குழப்பங்களை பற்றி பார்க்கலாம். சற்று கடினமான பதிவு தான். ஆனாலும் அவசியமானதும் கூட.;
இந்தியாவின் வடக்கு எல்லை காரகோரம் கணவாய். இந்த கணவாய் இமயமலையின் உச்சியில் இருந்து 320 கி.மீ., தொலைவிற்கு முன்பே வந்து விடுகிறது. இந்த கரகோரம் கணவாயினை ஒட்டிய பகுதியில் உள்ள 5400 சதுர கி.மீ., பரப்பளவு இந்திய நிலத்தை பாகிஸ்தான் சீனாவிடம் கொடுத்து விட்டது. இங்கு சீனா பல்வேறு கட்டுமானங்களை செய்து வருகிறது. மூன்றாவது முறையாக மோடி பொறுப்பேற்றதும் இந்த பணிகளை முற்றிலும் முடக்கி விடுவார். இந்த இடங்களை மீட்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் இப்போது இங்கு பாகிஸ்தான் மூலம் சீனா தீவிரவாத தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் மெந்தார் ஆகிய இடங்களில் இந்திய விமானப்படை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்திய விமானப்படை மீது சீனா தீவிரவாதிகளை ஏவி விட முக்கிய காரணமும் உள்ளது. இந்திய விமானப்படையிடம் நவீன தாக்குதல் வகை எல்.எல்.டி.ஆர்., வகை தாக்குதல் டிரோன்கள் உள்ளன.
இந்த ரேடார்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து 200 கி.மீ தொலைவிற்கு அப்பால் செல்லும் வாகனங்கள், அதில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் என அத்தனையும் துல்லியமாக கண்காணித்து கண்டறிந்து விடும். இந்த ரேடாரின் கண்காணிப்பு எல்லைக்குள் தான் சீனாவின் பட்டுப்பாதை வருகிறது.
இதனால் இந்த பாதையினை சீனா பயன்படுத்தி என்ன செய்தாலும் நொடிப்பொழுதில் இந்தியா கண்டறிந்து விடும். இதுவே சீனாவின் எரிச்சலுக்கு முக்கிய காரணம். இதனால் தான் சீனா இந்தகைய தாக்குதல்களை நடத்தி உள்ளது. அதெப்படி இவ்வளவு உறுதியாக தீவிரவாத தாக்குதல்களுக்கு சீனா தான் காரணம் என சொல்கிறீர்கள் என கேட்காதீர்கள்.
பூஞ்ச் மலைப்பகுதியில் இந்திய ராணுவத்தின் வேட்டையில் சிக்கிய தீவிரவாதிகளிடம் பிடிப்பட்ட எம்4-ஏ1 மற்றும் டைப்-56- 1 ரக துப்பாக்கிகள் அனைத்தும் சீனாவின் தயாரிப்பு. சிக்கிய ஸ்டீல் தோட்டாக்களும் சீனாவின் தயாரிப்பு. இதனை உறுதிப்படுத்திய பின்னர் தான் இந்திய ராணுவம் எல்லையில் தனது சீற்றத்தை தொடங்கியது. இந்திய ராணுவத்தின் கியூஆர்டி படைப்பிரிவுகள், பிஎஸ்எப் வீரர்கள், நடத்திய தாக்குதல்களில் பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற ராணுவவீரர்களே சிக்கினர்.
ஆமாம் பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்கள் வாழ வழியின்றி சீனாவின் கைக்கூலியாக சேர்ந்துள்ளனர். (இந்தியா தனது ஓய்வு பெற்ற ராணுவவீரர்களுக்கு கவுரவமான அரசு பணிகள், ஓய்வூதியம் வழங்கி வருகிறது). இப்படி சிக்கிய சீனாவின் கைக்கூலிகளை இந்திய ராணுவம் தகுந்த முறையில் கையாண்டது. தவிர இந்தியா பல ஆண்டுகளாக தேடிவந்த ஒரு பயங்கர தீவிரவாத இயக்க தலைவனையும் போட்டுத்தள்ளியது.
இதனால் வெளிநாட்டின் கைக்கூலி போல ஒரு இந்திய அரசியல் (வியாதி) வாதி ஒருவர் பாகிஸ்தான் அணுகுண்டுகளை வைத்திருக்கிறது என்பதை மறக்காதீர்கள் என கூறியிருந்தார். இதனை கேட்டதும் தான் பிரதமர் மோடி கொந்தளித்தார். பாகிஸ்தான் ராணுவம் தனது அணுகுண்டுகளை விற்பனை செய்ய முன்வந்தும் அதனை உலக நாடுகள் வாங்கவில்லை.
காரணம் எந்த அணுகுண்டுகள் தரம்குறைந்தவை என தனது பிரசாரத்தில் பேசியிருந்தார். நம் பிரதமர் இப்படி பேசி இதுவரை யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த அளவுக்கு பிரதமரையே கோபப்பட வைத்த சம்பவங்களும் எல்லையில் நடந்து கொண்டு தான் உள்ளன. சில அரசியல் வியாதிகள் சீனாவிடம் பிச்சையெடுத்துக் கொண்டு அவர்களுக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டுள்ளனர்.
இது தவிர இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தையும் சீனாவிடம் இருந்து பறித்து ரஷ்யாவிடம் கொடுத்து விட்டது, இந்தியா. அதேபோல் எல்லை மாநிலங்களில் அனுமதியின்றி நுழைந்து வாழ்ந்து வந்த வெளிநாட்டு ரோகிங்கியா முஸ்லீம்களை வெளியேற்றும் வேலையினையும் இந்தியா தொடங்கி விட்டது. அதேபோல் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் நம் பிரதமரை சந்திக்க டில்லியில் வந்து காத்துக்கிடக்கிறார்.
பர்மாவிலும் ஆட்சி மாற்றம் நடந்து விட்டது. விரைவில் கச்சத்தீவையும் இந்தியா குத்தகைக்கு எடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி விட்டது. இப்படி தேசப்பாதுகாப்பிற்காக பிரதமர் மோடி அயராது பாடுபட்டு வரும் நிலையில், இவரது பிரதமர் பணி தொடர்ந்தால் தங்களுக்கு சீனாவில் இருந்து வரும் பிச்சைப்பணம் வராமல் போய் விடுமோ என சில கைக்கூலிகள் அச்சப்பட்டு கூவுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை என தேசியவாதிகள் விமர்சித்து வருகின்றனர்.