அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ்?

AIADMK Latest News - தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-06-27 05:02 GMT

AIADMK Latest News -அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். 

அதேவேளை, அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர் செல்வத்தை நீக்கப்ப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News