mullai peryar dam issue-பிரதமருக்கு கடிதம் எழுதிய கேரள எம்.பி: தமிழக விவசாயிகள் கொந்தளிப்பு

mullai peryar dam issue முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்ட கேரள எம்.பி., பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-05-28 06:14 GMT

பெரியாறு வைகை பாசன சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம்.

mullai peryar dam issue- கேரள ராஜ்யசபா எம்.பி., ஜோஸ் கே மாணி பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கேரளாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தலைவர்களும், மக்களும் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் இருப்பதால், பழைய அணையினை இடித்து விட்டு, புதிய அணை கட்ட பாரத பிரதமரும், மத்திய அரசும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

இந்த கருத்துக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர். பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், 'ஜோஸ் கே மாணி கேரளாவில் தமிழர்களின் ஓட்டுக்களை நம்பி அரசியல் செய்பவர். அவர் அரசியல் செய்ய மட்டும் தமிழர்கள் ஓட்டு தேவைப்படும். ஆனால் வெற்றி பெற்றதும் தமிழர்களுக்கு துரோகம் செய்வார். இவரிடம் இருந்து இப்படி ஒரு கண்டிக்கத்தக்க மோசமான தகவல் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இந்த கருத்தை ஜோஸ் கே மாணி வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், அடுத்து வரும் தேர்தல்களி்ல் கேரளாவின் மத்திய மாநிலங்களில் தமிழர்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைத்து ஜோஸ் கே மாணிக்கு எதிராக வேலை செய்வோம் என கூறியுள்ளார்.

Tags:    

Similar News