women's self respect quotes in tamil-நம்மை மதிக்காதவரை மதிக்காமல் இருப்பது ஈகோ அல்ல..அதன் பெயர் சுயமரியாதை..!

women's self respect quotes in tamil-ஒவ்வொரு மனிதருக்குக்குள்ளும் இன்னொரு நான் என்கிற ஒருவர் இருக்கிறார். அந்த நான் என்பவர் எடுக்கும் முடிவுகளே வாழ்க்கையை தீர்மானிக்கிறது.

Update: 2022-10-05 11:25 GMT

women's self respect quotes in tamil-மனிதர்கள் வாழ்ந்தோம் செத்தோம் என்று வாழ்வதைவிட, வாழ்வதற்கான பொருளறிந்து வாழ்வதே மேல். வாழ்க்கையில் பணம் மட்டுமே எல்லாவற்றையும் தந்துவிடமுடியாது. முதலில் மனிதனுக்கு தன்மானமும் சுயமரியாதையும் அவசியம். தன்மானம் உள்ளவன் எப்படியும் வாழலாம் என்று எண்ணமாட்டான். மானமும் சுயமரியாதையும் உள்ளவன் இப்படித்தான் வாழவேண்டும் என்று எண்ணுவான். பணத்துக்காக சுயமரியாதையை இழக்கமாட்டான். 

  • வீழும்போதுதான் வாழ்ந்து காட்டவேண்டும்....வாழ்க்கையும் நம் முன் மண்டியிடும், அது நமது தன்னம்பிக்கைக்காக..
  • நாம் எப்படி வாழ் வேண்டும் என்பதை பிறர் முடிவு செய்யமுடியாது.. நாம தான் முடிவு செய்ய வேண்டும், அடுத்தவர் இல்லை.
  • நம்மை மதிக்காதவர்களை நாம் ஏன் மதிக்கவேண்டும்..? அது ஈகோ அல்ல அதற்குப்பெயர்தான் சுயமரியாதை..!
  • வருமானம் இல்லா வாழ்க்கை ஒன்றும் அவமானம் இல்லை..தன்மானம் இல்லாமல் வாழ்வோர்தான் வெட்கப்படவேண்டும்.
  • தன்னந் தனியே நின்றாலும் தன்மானத்தோடும்,சுய மரியாதையோடு வாழ்வதில் ஒன்றும் தவறில்லை..!

women's self respect quotes in tamil

  • மானமுள்ள ஆயிரம் பேரிடம் போராடுவது மானமுள்ளவனுக்கு அழகு..! ஆனால் மானமற்ற ஒருவனுடன் போராடுவது மணமுள்ளவன் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்.
  • நம்மை மதிக்கும் இடத்தில் மண்டியிடக் கூட தயங்க வேண்டாம்..ஆனால், மதிக்காத இடத்தில் நாம் மன்னிப்பு கேட்டுவிட்டால் அந்த மன்னிப்பு கூட நம்மை மன்னிக்காது..!
  • நமது சுயமரியாதையை இழந்துதான் அன்பும், பாசமும்,காதலும் வரும் என்றால் அதைவிட தனித்து வாழ்வதே மேல். மானமற்ற ஒருவருடன் போராடுவதற்கு பதில் தனிமையே சிறந்தது..!
  • தன்னைத் தானே தாழ்த்திக்கொள்பவனைப் போல தரணியில் மோசமானவன் யாரும் இல்லை. சுய கருணையால் எழும் தாழ்வு மனப்பான்மை. அது தற்கொலைக்கு சமமானதே..!

women's self respect quotes in tamil

  • நம் தன்மானத்தை இழந்து ஒருவரிடம் பழகினால் நம் மீது அவர்களுக்கு அன்பு இருக்காது, அங்கு அடிமைத்தனம்தான் கோலோச்சும். தன்மானமா.. அடிமைத்தனமா ..என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும்.
  • வசதியில் ஏழையாக இருக்கலாம்..ஆனால், வைராக்யத்தில் கோடீஸ்வரனாக இரு. சுயமரியாதைதான் நமது சொத்து, பணம் அல்ல..!
  • யாருக்காகவும், எதற்காகவும் நம் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கக்கூடாது..! இல்லாவிடில், அனைத்தையும் இழந்து விடுவோம்..ஒரே நொடியில்..!
  • தகுதியற்ற ஆசைகள், தகுதியற்ற கனவுகள், தகுதியற்ற லட்சியம் என்று நம்மை கேலி பேசுவோர் மத்தியில் நம்மை தகுதியானவராக மாற்றிக்கொள்வதே சுய மரியாதை..! தேடாதவரும் நம்மை தேடி வருவர்..!

women's self respect quotes in tamil

  • நாம் யார்? நமது தகுதி என்ன? எதி நமது இலக்கு என்று நம்மை, நம் மனதைப் படிக்க கற்றுக்கொள்வதே நாம் நம்மை அறிந்துகொள்வதே நமக்கான வெற்றிப்பாதையை உறுதி செய்கிறது..!
  • மற்றவர்களின் அபிப்பிராயம் குறித்து கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் நமது வாழ்க்கையை நாமே தொலைத்துவிடுவோம். அதைவிட வேறு எதிரி வேண்டாம்.. !
  • நமது வலிக்கு மருந்தளிக்க யாரும் வந்துவிடமாட்டார்கள்..! அதே போல நமது மகிழ்ச்சியையும் யாரும் கொண்டுவந்துவிட முடியாது. அது உன் கையில்தான் உள்ளது.
  • உனக்கான இடத்தை யாரும் பறித்துவிடமுடியாது, நீ சுயமரியாதையுடன் உனது வழியில் உழைத்துக்கொண்டிருக்கும்வரை..!

women's self respect quotes in tamil

  • நாம் நம்மை அறிந்தால் மட்டுமே உனக்கான இடம் எது என்பதை உறுதி செய்யமுடியும்..! எனவே..முதலில் நாம் யார் என்பதை அறிவோம்..!
  • திறமையும், நம்பிக்கையுடன் அதற்கான பாதையில் செல்வதற்கான முழு முயற்சி இருந்துவிட்டால் வெற்றி என்பதும் நமக்கு முன்னால் ஓடோடிவந்து நிற்கும்..!
  • தோல்வி குறித்து கவலைப்படாமல் தோல்விக்கான காரங்களை ஆராய்ந்தால் தோல்வியும் நம் முன் தோல்விகண்டு ஓடிவிடும்..!
  • வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது..அது இயற்கை அளித்த கொடை.. நம்பிக்கை தோன்றும் போதுதான் வாழ்க்கை கூட அழகாகிறது. உன்னை நம்பாதோரும் நம்புவார்கள்..மதக்காதவரும் மதிப்பார்கள்..!

women's self respect quotes in tamil

  • நமக்கு ஏற்பட்ட துன்பங்கள் மனவலிமை தரும் பாடங்கள் என்ற நேர்மறை சிந்தனை கொள். நமக்கு எதையும் தாங்கும் வலிமையான இதயம் வந்து விடும். துணிவுடன் சென்றுவிடலாம் வெற்றிக்கோட்டை நோக்கி. 
  • வெற்றிக் கதைகளை என்றும் படித்து அதை பின்பற்ற விரும்பாதீர்கள்..அதில் கிடைப்பது வெறும் தகவல்கள் மட்டுமாகத்தான் இருக்கும்.. தோல்விக் கதைகளை தேடிப்படியுங்கள்..நாம் வெற்றி பெறுவதற்கான புதிய மார்க்கம் அங்குதான் பொதிந்து கிடக்கிறது.
  • நம் பிரச்சனைகளை நாமே தீர்துக்கொள்ளும் போதுதான் நம் மனமே நம்மை விரும்பத்தொடங்கும்..அங்குதான் தன்னம்பிக்கையின் தொடக்கப்புள்ளி உள்ளது. விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே..
  • எல்லாம் இருந்தாலும் இல்லை இல்லை என்று சொல்பவர்களை வாழ்க்கையில் ஒதுக்கித் தள்ளிவிடவேண்டும். அவர்கள் எத்தனை பேர் இருந்தும் உனக்கு எவ்வித பயனின் இல்லை..! அவர்கள் முன் வாழ்ந்துகாட்டு. 

women's self respect quotes in tamil

  • தொடர்ந்து முயற்சி செய்வதால் எந்த குறையும் வந்துவிடப்போவதில்லை. தோல்விகூட இவ அடங்க மாட்டாள் என்று உங்கள் முன் மண்டியிட்டு நிற்கும்..
  • அனைத்தையும் இழந்தபோதும் நம் நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது..
  • வியர்வைத் துளிகள் எவ்வளவு என்று கணக்கெடுத்துக்கொண்டிருக்காதே..அது உன் தோல்விக்கணக்கை வகுத்துவிடும்..
  • வாய்ப்புகள் நம்மை கடந்து சென்றாலும், நம்ம கடந்துசென்றா காரணம் யோசி..! அதை பின்தொடர்ந்து விரட்டிச் செல்..உன் வெற்றி உறுதியாகும்..
  • விழுந்தால் எழுவேன் என்ற விதை நம் குழந்தை பருவத்தே போட்ட வித்து..விழு..விழு விழுந்து எழு..

women's self respect quotes in tamil

  • முயற்சியில் கிடைத்த தோல்வி நமக்கான வெகுமதி அது நமக்கான பயிற்சி..நம்மை மெருகேற்றும் பட்டறை..
  • அனுபவம் இருந்தால் தான் எதையும் செய்ய முடியும் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தாது. முதன் முதலில் தொடங்கப்படுவது தன்னம்பிக்கை சம்பந்தப்பட்டதுதான். தன்னம்பிக்கை இல்லையெனில் எதுவும் சாத்தியம் இல்லை..
  • எதிரப்பு இல்லாத பயணம் சுவையற்றது. எதிரிதான் நமக்கான பயணம் எது என்பதை தீர்மானிக்கிறார்..வாழ்க்கையில் தடைகள் இருந்தால்தான்..வெற்றியை ருசிக்கமுடியும்..
  • மனதில் உறுதி இருப்பவர் மட்டுமே வெற்றியின் கோபுரம் அடையமுடியும்..அது தானாக வந்துவிடாது..முயற்சியும் உழைப்பும் சேர்ந்த கலவைதான் வெற்றி..
  • வாய்ப்புகள் நம் வீட்டு கதவை வந்து தட்டாது. கிடைக்கும் வாய்ப்புகளை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதே .புத்திசாலித்தனம்.
Tags:    

Similar News