பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
சமூக மாற்றத்திற்கான போராளியாக மட்டுமன்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்தவர் அம்பேத்கர்.
Dr Ambedkar Quotes in Tamil
பிறப்பு: ஏப்ரல் 14, 1891, மகாராஷ்டிரா மாநிலம், மோவ்.
இறப்பு: டிசம்பர் 6, 1956, டெல்லி
Dr Ambedkar Quotes in Tamil
முக்கிய பங்களிப்புகள்:
இந்திய அரசியலமைப்பின் தந்தை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதற்கான குழுவின் தலைவராக இருந்தார். இந்த அரசியலமைப்பு சமூக நீதி, சமத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகளை மையமாக கொண்டது.
தலித் உரிமைகளுக்கான போராளி: ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக அயராது பாடுபட்டார். தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
புத்த மதத்தின் புதுமலர்ச்சி: லட்சக்கணக்கான தலித் மக்களை புத்த மதத்திற்கு மாற வழிவகுத்தார். இது பாகுபாடு மற்றும் சாதிய கொடுமைகளுக்கு எதிராக அவரது போராட்டத்தின் ஒரு அங்கமாக இருந்தது.
பொருளாதார நிபுணர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி: இந்தியாவின் பொருளாதாரம், தொழிலாளர் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். அவரது படைப்புகள் இந்தியாவின் கொள்கை உருவாக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
Dr Ambedkar Quotes in Tamil
சிறந்த படிப்பாளி: பல பட்டங்கள் மற்றும் டாக்டர் பட்டங்களைப் பெற்றவர். சமூகவியல், சட்டம், பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கினார்.
மரபு:
'பாபாசாகேப்' என போற்றப்படுபவர்: அவரது சிறந்த பங்களிப்புகளால் "பாபாசாகேப்" (மரியாதைக்குரிய தந்தை) என்று மக்களால் அழைக்கப்படுகிறார்.
பாரத ரத்னா: இந்தியாவின் மிக உயர்ந்த குடிமை விருதான பாரத ரத்னா விருது, அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
சமூக நீதியின் சின்னம்: இந்தியாவிலும் உலகளவிலும் சமூக நீதியின் சின்னமாகத் திகழ்கிறார்.
செல்வாக்கு
டாக்டர் அம்பேத்கரின் பணிகள் இந்தியாவில் சமூக மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்தது மட்டுமின்றி, ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகளுக்கான உலகளாவிய இயக்கங்களுக்கும் அவர் உத்வேகம் அளித்துள்ளார்.
Dr Ambedkar Quotes in Tamil
அம்பேத்கர் பொன்மொழிகள்
1.நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது.. உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை.
2. மற்றவர்களின் எல்லா தேவைகளையும் நிவர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்த பெயர் ஒருபோதும் தேவையில்லை.
3. வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான்.
4. எவனொருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பபடி செயல்படாமல். அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்.
5. அறிவு நன்னடத்தை சுயமரியாதை இவையே நான் வணங்கும் தெய்வங்கள் இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
Dr Ambedkar Quotes in Tamil
6. ஒரு லட்சியத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
7. அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தை குழிதோண்டிப் புதையுங்கள்.
8. உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது.
9. மகாத்மாக்கள் வந்தார்கள் மகாத்மாக்கள் மறைந்தார்கள் ஆனால் தீண்டாமை இன்னும் அப்படியே தான் இருக்கிறது.
10. தலைவிதி என்ற எண்ணமே தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலை உணர்வுகளை மரத்துப்போக செய்கின்றது.
Dr Ambedkar Quotes in Tamil
11. கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையை உன் பிள்ளையின் கல்விக்கு செலுத்து அது உனக்கு பயன் தரும்.
12. சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள் குறிக்கோளை எட்டும் வரை தீ போல் சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்.
13. எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்கமாட்டான்.
14. அறிவை தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.
15. ஆடுகளை தான் கோயில்களின் முன் வெட்டுகிறார்களே தவிர சிங்கங்களை அல்ல.. ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள்.
Dr Ambedkar Quotes in Tamil
16. நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று
- முதல் தெய்வம் அறிவு.
- இரண்டாவது சுயமரியாதை.
- மூன்றாவது நன்னடத்தை.
இவற்றை தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.
17. ஒருவன் அடிமைப்பட்டு இருந்தால் அவன் அடிமைபட்டு இருப்பதை உணர்த்தினாலே போதும் பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
18. நான் யாருக்கும் அடிமையில்லை. எனக்கு யாரும் அடிமை இல்லை.
19. சாதி அமைப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பெண்களே ஆவர். ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு சாதியை கடத்துவது அவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிறது.
20. சாதிகள் அனைத்துமே தேசவிரோத சக்திகள்.
Dr Ambedkar Quotes in Tamil
21. இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வைத் தராத வரை.. சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் அதனால் பயன் இல்லை.
22. சமுதாய சிந்தனைகளை விட வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு.
23. சாதிய அமைப்பு முறை என்பது ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களை சமூகங்களாக பிரித்து வைத்திருக்கின்றது.
24. குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை ஆண்கள் பட வேண்டியிருந்தால் அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள்.
Dr Ambedkar Quotes in Tamil
அம்பேத்கர் தத்துவம்
25. சாதி அமைப்பு புனிதமாக கட்டப்பட்டிருக்கிறது இந்த புனிதத்தன்மையை முதலீடாக கொண்டு இயங்கும் மதத்தையும் சாஸ்திரங்கள் மீதான நம்பிக்கையும் ஒழிக்க வேண்டும்.
26. பிறந்த சமூகத்தின் விடுதலைக்காக போராடவில்லை எனில் அந்த சமூகத்தின் முதல் சாபக்கேடு நீ தான்.
27. ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள் ஜாதித் தலைவராக மாற்றப்படுவது மாறாதவரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.
28. கடவுளுக்கு கொடுக்கும் காணிக்கையை விட ஏழைகளுக்கு கொடுக்கும் கல்வி மேலானது.
29. ஒரு மதம் விலங்குகளை தொடுவதை புனிதமாகவும் சக மனிதர்களை தொடுவதை தீட்டாகவும் கருத்துமாயின் அது மதம் அல்ல. அது கேலிக்கூத்து.!
Dr Ambedkar Quotes in Tamil
30. சிந்தனை விடுதலையே அனைத்து விடுதலைக்கும் அடிப்படையானது.
31. ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுயமரியாதை. இதை இழந்து வாழ்வது தான் பெரிய அவமானம்.
32. எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதனை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் மனிதனே இல்லை.
33. சாதி எனும் கீழ்த்தனத்தினால் தான் பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மை இல்லாமல் வாழ்கிறார்கள்.
34. இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. இது பல இனக்குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வ குடியான தமிழர்களே கொண்டாட முடியும்.