கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்: 2 நாள் பலத்த மழை பெய்யும்..!

Red Alert in Kerala - கேரளாவில், தென்மேற்கு பருவ மழை காரணமாக 11 மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்யும் என எல்லோ அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-02 06:46 GMT

Red Alert in Kerala -கேரளாவில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் எல்லோ அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்திலும், தொடுபுழாவிலும் கடும் மழை பெய்கிறது. மூணாறு, அடிமாலி உள்ளிட்ட மலையோரப்பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில் 11 மாவட்டங்களில் 2 நாட்கள் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாவட்டங்களின் மக்களுக்கு எல்லோ அலர்ட் விடுத்து, ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அடிக்கடி மழை, வெள்ளச்சரிவு என இயற்கை இடர்ப்பாடு காரணமாக பெரும் பாதிப்பை அண்மைக்காலங்களில் தொடர்ந்து சந்தித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலும் இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் தான் அதிகம் பேரை பாதித்தது. எவ்வளவு பிரச்னைகள், இயற்கை இடர்பாடுகள் என்றாலும் அதில் இருந்து வெகுவிரைவாக கேரள மக்கள் தன்னம்பிக்கையுடன் விரைவாக மீண்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது விடுக்கப்பட்ட எல்லோ அலர்ட்டில் இருந்தும் மீள்வார்கள் என, எதிர்பார்க்கலாம்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News