மாப்பிள்ளை இல்லாத கல்யாணம்..! தன்னையே கல்யாணம் பண்ணும் விநோதப்பெண்

sologamy girl marry herself - குஜராத்தில் ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் ஒரு வினோத சம்பவம் வரும் 11ம் தேதி நடக்கவுள்ளது.

Update: 2022-06-03 08:18 GMT

sologamy girl marry herself-ஏங்க.. ஒரு பெண் இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை கேள்விப்பட்டிருக்கோம். ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்துகொள்வதையும் கேள்விப்பட்டிருக்கோம். இது ரொம்ப புதுசா இருக்குங்க..ஆமாங்க..ஒரு பெண் தன்னையே திருமணம் செய்துகொள்ளப்போறாங்க..! நம்ப முடியுதா..? நிஜம்ங்க..குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த 24 வயது பெண் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளப்போறாங்க.. அவங்க பேரு ஷமா பிந்து. அவங்க முறையாக திருமணம் எப்படி நடக்குமோ சம்பிரதாயப்படி திருமணம் செய்ய தயாராகிவிட்டார்.

சோலோகமி ஷமா பிந்து 

ஆமா. அந்த ஷமா பிந்து யார்னு தெரிஞ்சிக்கலாமா?

வதோதராவில் வசிக்கும் ஷமா, ஜூன் 11-ம் தேதி தன்னை திருமணம் செய்து கொள்கிறார். ஷமா சமூகவியலில் பட்டம் பெற்றவர். தற்போது தனியார் நிறுவனத்தில் HR -ஆகப் பணியாற்றி வருகிறார். அவருடைய பெற்றோர் இருவரும் பொறியாளர்கள். அவரது தந்தை தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார். அவரது தாயார் அகமதாபாத்தில் இருக்கிறார்.

நளினமாக ஷமா 

பெரும்பாலான பெண்கள்,தான் திருமணம் செய்துகொள்ளும் இளைஞன் எப்படி இருக்கவேண்டும் என்று மனதுக்குள் ஒரு நிழலாக ஒரு நிஜத்தை பதிந்து வைத்திருப்பார்கள். ஆனால் இந்த ​​ஷமா தனது மாப்பிள்ளையை தனக்குள்ளேயே கண்டுபிடித்துள்ளார். இது ஆச்சரியமாகவே உள்ளது. அவர் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அதனால் அவர் தானே ஒருவராக அக்னியை சுற்றி வர முடிவு செய்துள்ளார்.

ஷமா பிந்து தன்னைத்தானே 11ம் தேதி திருமணம் செய்கிறார் :

ஷமாவின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. திருமணத்திற்கு லெஹங்கா ஆர்டர் செய்தாச்சு. திருமண அழைப்பிதழ்களும் விநியோகம் செய்தாச்சு. ஆனால், அழைப்பிதழில் மணமகன் பெயர்தான் இல்லை. வினோதமாக மணமகளின் பெயர் மட்டுமே உள்ளது. ஷமாவிற்கு நிலைமையைப் புரிய வைக்க ஷமாவின் பெற்றோருக்கு பல மணிநேரம் தேவைப்பட்டது. ஆனாலும், இறுதியில் அவர்  விருப்பத்திற்கு இருவரும் சம்மதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

ஸ்டைலிஷ் ஷமா 

sologamy girl marry herself-ஐயர் மறுப்பு :

இந்த வித்தியாசமான திருமணத்தை நடத்த ஐயர் மறுத்துவிட்டார். ஆனால் வற்புறுத்தி சம்மதிக்க வைத்துள்ளனர். ஷமா தனது நண்பர்கள் முன்னிலையில் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளப்போகிறார். அவரது பெற்றோர் வீடியோ அழைப்பு மூலம் திருமண விழாவில் கலந்து கொள்வார்கள். ஷமா தேனிலவு கூட போறாங்க. அதுவும் கோவா செல்ல திட்டமிட்ருக்காங்க..!

சோலோகாமி என்றால் என்ன?

ஆங்கிலத்தில் Polygamy என்றால் பலதாரமணம் செய்தவர் என்று பொருள். அதேபோல சோலோகமி(Sologamy ) என்பது தன்னைத்தானே   சுய-திருமணம் செய்துகொள்வதற்கான  மாற்றுச் சொல்.

இப்படி கேள்விப்படாத சோலோகமி திருமணத்தில்  ஷமாவுக்கு நாமும் வாழ்த்து தெரிவிப்போம்.

Tags:    

Similar News