ராமாயணம், மகாபாரதத்தில் சாதித்த முஸ்லிம் மாணவர்கள்

அனைத்து இந்தியர்களும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிக்க வேண்டும் என வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-08-12 02:15 GMT

ராமாயணம், மகாபாரதம் பற்றிய வினாடி வினா போட்டிகளில் வென்ற முஸ்லீம் மாணவர்கள்.

கேரளா மாநிலம் மலப்புரத்தில் ராமாயண வினாடி வினா போட்டி நடந்தது. ஆன்லைன் வாயிலாக நடந்த இந்த வினாடி வினா போட்டியில் கேரளாவில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ராமாயண வினாடி வினா போட்டியில் முஸ்லிம் மாணவர்கள் முதல் 2 இடங்களை பிடித்தது அங்குள்ள ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்தி பரவியதை அடுத்து பல தரப்பு மக்களும் கல்லூரி மாணவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ராமாயண வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் ஜபீர் கூறுகையில், ''நான் சிறுவனாக இருந்ததில் இருந்தே, இதிகாசங்கள் பற்றி அறிந்திருந்தேன். குறிப்பாக முஸ்லிம் மதத்தை தாண்டி இந்து, பௌத்தம் உள்ளிட்ட மற்ற மதங்களை பற்றியும் ஆழமாக படிக்க தொடங்கினேன்.

குறிப்பாக வாபி பாடத்தில் சேர்ந்த பிறகு இதைப்பற்றி ஆழமாக படிக்க தொடங்கினேன். அந்த வகையில் ராமாயணமானது அனைத்து இந்தியர்களும் படிக்க வேண்டும். குறிப்பாக ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை அனைத்து இந்தியர்கள் படிக்க வேண்டும். ஏனெனில் அவற்றில் நாட்டின் கலாசாரம் குறித்தும் பாரம்பரியம் மற்றும் வரலாறு குறித்தும் கூறப்பட்டுள்ளன.

ராமாயணத்தில் ராமன் தனது தந்தையான தசரருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தன் ராஜ்யத்தை துறந்து 14 ஆண்டுகள் சிறைவாசம் சென்றார். தந்தையின் சொல்லுக்காக ராஜ்யத்தை கூட துறந்த ராமனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோல ஒவ்வொரு மதமும் வெறுப்பை கற்று தருவதில்லை. அனைத்து மதங்களும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் மட்டுமே கற்று தருகிறது. இந்த வினாடி வினா போட்டி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது" என்று கூறினார். மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டும் வகையில் இவர்கள் பேசியிருப்பதாக பல்வேறு தரப்பினருக்கும் 2 மாணவர்களையும் பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News