மீடியாக்கள் நடத்தும் தன்னிச்சையான நீதிமன்றங்கள்: தலைமை நீதிபதி சாடல்

Chief Justice NV Ramana- உங்கள் பொறுப்பை மீறுவதன் மூலம், நீங்கள் நமது ஜனநாயகத்தை இரண்டு படிகள் பின்னோக்கி கொண்டு செல்கிறீர்கள் என்று நீதிபதி என்வி ரமணா கூறினார்.

Update: 2022-07-23 08:18 GMT

உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ஏ.வி.ரமணா 

Chief Justice NV Ramana- ராஞ்சியில் ஒரு கல்வி நிகழ்வில் உரை நிகழ்த்திய நீதிபதி ரமணா பேசுகையில், நீதிபதிகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட பிரச்சாரங்கள் உள்ளன. நீதிபதிகள் உடனடியாக எதிர்வினையாற்ற மாட்டார்கள். தயவு செய்து அதை பலவீனம் அல்லது செயலற்ற தன்மை என்று தவறாக நினைக்காதீர்கள்.

தொலைக்காட்சி விவாதங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நடக்கும் அதிகாரபூர்வமற்ற கங்காரு நீதிமன்றங்கள் நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கின்றன.  அவர்களின் நடத்தை பக்கச்சார்பானது, தவறான தகவல்களை அளிப்பது மற்றும் திட்டமிடப்பட்டு நடத்தப்படுவது என்று விமர்சித்தார்.

முஹம்மது நபியைப் பற்றிய முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு இந்த மாத தொடக்கத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்குப் பின்னடைவைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன, இது நாடு முழுவதும் வகுப்புவாத பதட்டத்தைத் தூண்டியதாக உச்ச நீதிமன்றம் கூறியது .

இது குறித்து தலைமை நீதிபதி மேலும் கூறுகையில், புதிய ஊடக செயல்பாடுகள், ஒரு விஷயத்தை ஊதி பெரிதாக்கும் திறமையை கொண்டுள்ளன, ஆனால் சரி மற்றும் தவறு, நல்லது மற்றும் கெட்டது மற்றும் உண்மையானது மற்றும் போலியானவை ஆகியவற்றை வேறுபடுத்திப் பார்க்க இயலாது.

ஊடக விசாரணைகள் வழக்குகளை தீர்ப்பதில் வழிகாட்டும் காரணியாக இருக்க முடியாது. ஊடகங்கள் அவர்களாகவே தனியாக நீதிமன்றங்களை நடத்துவதை நாம் காண்கிறோம், சில சமயங்களில் அனுபவம் வாய்ந்த நீதிபதிகள் கூட முடிவெடுப்பது கடினம். என்று அவர் கூறினார்.

நீதி வழங்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பற்றிய தவறான தகவல் மற்றும் நிகழ்ச்சி நிரல் சார்ந்த விவாதங்கள் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாக நிரூபணமாகிறது. ஊடகங்களால் பரப்பப்படும் பாரபட்சமான கருத்துக்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகவும், அமைப்புமுறைக்கு கேடு விளைவிப்பதாகவும் அதன் காரணமாக நீதி வழங்கல் மோசமாக பாதிக்கப்படுகிறது என்றும் தலைமை நீதிபதி கூறினார்.

"உங்கள் பொறுப்பை மீறுவதன் மூலம், நீங்கள் நமது ஜனநாயகத்தை இரண்டு படிகள் பின்னோக்கி கொண்டு செல்கிறீர்கள்" என்று நீதிபதி ரமணா கூறினார்.

அச்சு ஊடகம் இன்னும் குறிப்பிட்ட அளவு பொறுப்புக்கூறலைக் கொண்டுள்ளது, எலக்ட்ரானிக் மீடியாக்களுக்கு பூஜ்ஜிய பொறுப்பு உள்ளது என்று கூறிய தலைமை நீதிபதி, ஊடகங்கள் தங்களைத் தாங்களே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஊடகங்கள் தங்கள் வார்த்தைகளை சுயமாக கட்டுப்படுத்திக் கொள்வது சிறந்தது. மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மின்னணு ஊடகங்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி நாட்டு மக்களுக்கு கல்வி கற்பிக்கவும், உற்சாகப்படுத்தவும் வேண்டும் என்று கூறினார்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News