பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

Rocket Launch Today - ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது.

Update: 2022-06-30 04:02 GMT

Rocket Launch Today - ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின், இரண்டாம் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி- 53 டிஎஸ்-இ ஓராக்கெட் விண்ணில் பாய்கிறது. அதற்கான 25 மணி நேர கவுண்டவுன்ட் நேற்று ( ஜூன் 29 ஆம் தேதி ) மாலை 5 மணிக்கு தொடங்கியது.

டிஎஸ்-இஓவுடன் சிங்கப்பூரின் என்இயு-சாட் , ஸ்கூப் 1 , நியூசர் ஆகிய 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட இருக்கிறது, முழுக்க முழுக்க வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்த ராக்கெட்டை இஸ்ரோ முன்னெடுத்திருக்கிறது.

இஸ்ரோ தலைவராக சோம்நாத் பொறுப்பேற்ற பிறகு செலுத்தப்படும் இரண்டாவது பிஎஸ்எல்வி சி- 53 ராக்கெட் திட்டம் இதுவாகும். பிஎஸ்எல்வி சி - 53 ராக்கெட் தாங்கிச் செல்லும் டிஎஸ்- இஓ செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் உயரத்தில் சூரிய வட்ட சுற்றுப்பாதை நிலைநிறுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கைக்கோள் சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு, வேளாண், வனம் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த உள்ளது.


அதேபோல் ஸ்கூப் 1 செயற்கைகோள் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வழிவமைத்துள்ளனர். இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பருவ நிலைகளிலும் துல்லியமான படங்களை வழங்கும் திறன் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஆய்வுத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட இரண்டு செயற்கைக்கோள்களும் ஏவப்பட உள்ளன.  

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News