இந்தியா- எதிர்க்கட்சிகள் 3வது கூட்டம் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைப்பு

india opposition party meet postponed பாஜ ஆட்சிக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்புதான் இந்தியா.இதன் 3வது ஆலோசனைக்கூட்டமானது செப்டம்பர் மாத முதல் வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-30 09:59 GMT

இம்மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் பெங்களூரில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்  (கோப்பு படம்)

india opposition party meet postponed

இந்தியாவில் பிரதமர் மோடியின் பாஜவுக்கு எதிராக ஒரே அணி திரண்ட எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கு இந்தியா என பெயரிட்டுள்ளனர். இந்த அணியின் முதல் கூட்டமானது பாட்னாவிலும் இரண்டாவது கூட்டமானது பெங்களூரி்லும் நடந்தது. மூன்றாவது கூட்டமானது ஆகஸ்ட் மாதத்தில் மும்பையில் நடக்கும் என இரண்டாவது கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் லோக்சபாவுக்கான பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. தற்போதுள்ள மோடி தலைமையிலான பாஜ ஆட்சியின் 5 ஆண்டுகாலம் நிறைவடைவதால் இத்தேர்தல் நடத்தப்படுகிறது.

india opposition party meet postponed


பெங்களூரில் நடந்த இந்தியா ஒருங்கிணைப்பின் இரண்டாவது ஆய்வுக்கூட்டம் (கோப்பு படம்)

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடியின் பாஜ ஆட்சியை வீழ்த்தவேண்டும் மேலும் மூன்றாவது முறையாக இந்தியாவை பாரதிய ஜனதா ஆளக்கூடாது என திமுக,திரிணாமுல், காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகள் அல்லாது இன்னும் பிறகட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரே அணியாக திரண்டுள்ளது. இதற்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டமானது பீகார் மாநிலத்திலுள்ள பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் 23 ம்தேதி நடந்தது. இரண்டாவது கூட்டமானது கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கடந்த 17 மற்றும் 18 ந்தேதிகளில் நடந்தது. இந்த கூட்டணியில் மொத்தம் 26 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.மூன்றாவது கூட்டமானது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆகஸ்ட் 25 மற்றும் 26ம் தேதிகளில் மும்பையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென இந்த கூட்டமானது வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேசியவாத காங். தலைவர் சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் இந்த கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக காரணத்தினை தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News