செத்துட்டேன்னு சொல்லிட்டாங்க.. பவர் ஸ்டாரின் அசத்தலான பதில்

Powerstar Srinivasan- தன்னை பற்றி அடிக்கடி வரும் வதந்திகளுக்கு நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் பதில் அளித்து இருக்கிறார்.

Update: 2022-10-06 06:00 GMT

நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் 

Powerstar Srinivasan- தன்னை பற்றி அடிக்கடி வரும் வதந்திகளுக்கு நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் பதில் அளித்து இருக்கிறார்.

பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் சீனிவாசன் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராவார். கடந்த 2013ம் ஆண்டு நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் முன்னணி வேடத்தில் நடித்திருந்தார். இதற்கு முன் 'லத்திக்கா' எனும் தமிழ்த் திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார் பவர் ஸ்டார்.

கடந்த 2012ம் ஆண்டு ஜி. யு. பாலசுப்பிரமணியன் எனும் குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எசு இன்டர்நேசனலின் உரிமையாளரை ஏமாற்றி மோசடி செய்ததற்காக சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 இலட்சம் வாங்கியதாகவும் ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக் பாலசுப்பிரமணியன் கூறினார். இரண்டு வாரங்களுக்குப்பின் பவர் ஸ்டார் சீனிவாசன் பிணையில் விடுதலையானார்.

2013ல் ஏப்ரல் 26ம் தேதி மத்திய குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. இதற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகவிருந்தது.

2018ல் டிசம்பர் 7ம் தேதி பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்ததால், பவர் ஸ்டாரை கடத்தியது யார் என தெரிந்தது.

 powerstar srinivasan exclusive interview 

இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், எந்த அளவுக்கு ரசிகர்களை திருப்தியடைய வந்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, ரொம்ப சந்தோஷமாக உள்ளது. ஷூட்டிங் ஸ்பாட் போனால், இந்த படம் ஜெயிக்கும்; மக்கள் தன்னை ரசிக்கணும். மேலும் மேலும் மக்கள் வரவேற்பு கொடுக்கணும் என்ற உணர்வு ஒவ்வொரு நடிகர்களுக்கும் இருக்கும். சூப்ப்ர் ஸ்டார் ஒரு படம் வெற்றி பெற்றவுடன், அடுத்த படம் தேவையில்லை என சொல்வது இல்லையே. நடிச்சிகிட்டு தான் இருக்கிறார். எந்த வொரு தொழிலிலும் ஆர்வம் வேண்டும். என்னதான் கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் நடிக்க ஆர்வம் வேண்டும். இது போதும் என்றாலே முடிந்துவிடும் கதை. என வாழ்நாள் முழுவதும் நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததைப்பற்றி கேட்டதற்கு, பிக்கப் படத்தில் ஓடி வருவது போன்ற படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது தண்ணீர் இருப்பது தெரியாமல் வழுக்கி விழுந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர்கள் 15 நாட்கள் ஓய்வெடுக்க அறுவுறுத்தினர். ஆனால் நான் ஓய்வெடுக்காமல் இருந்ததால் மீண்டும் முதுகுவலி ஆரம்பித்தது. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அந்த சமயத்தில்தான் சமூக வலைதளங்களில் இறந்ததாக வதந்தி பரவியது. ரசிகர்களின் பிராத்தனைகளால் தான் நான் தற்போது உள்ளனே். அவர்களை என்றென்றும் மறக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News