தீபிகா இல்லன்னா கீர்த்தி.. விஜய் பற்றி பேசிய நடிகை..!

தீபிகா இல்லன்னா கீர்த்தி.. விஜய் பற்றி பேசிய நடிகை..!;

Update: 2024-05-04 13:45 GMT

தமிழ் சினிமாவின் வசூல் ராஜா விஜய்யின் 68வது படத்தின் பெயர் "GOAT" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், வெங்கட் பிரபு, பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிப்பு வினியோகஸ்தர்கள், பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவு வேலையை ராகுல் பிரசாத் பண்ணுகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பிரவீன். இந்த படம் 2024 ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளில் திரைக்கு வரவுள்ளது என்று கூறப்படுகிறது.

விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த "பைரவா" மற்றும் "சர்கார்" ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த படங்களில் இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

விஜய் பொதுவாகவே நன்கு நெருங்கி பழகுபவர்களிடம் ஜாலியான டைப். ஒருமுறை கீர்த்தி சுரேஷ், "விஜய் சாருக்கு தீபிகா படுகோன் தான் சரியான ஜோடி. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடித்தால் படம் பட்டையை கிளப்பும்" என்று அவரிடமே கூறியுள்ளார். உடனடியாக விஜய், "எனக்கும் தீபிகா கூட நடிக்கனும்னு ஆசை தான். என்ன பண்றது கிடைப்பது கீர்த்தி தானா" என்று கலாய்த்துள்ளார். இதனை கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு நானியுடன் இணைந்து நடித்த தசரா, உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து மாமன்னன், சிரஞ்சீவியுடன் போலா சங்கர் ஆகிய 3 படங்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு சைரன், ரகுதாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.

Tags:    

Similar News