'நம்ம ஊரு' யோகிபாபுவை வணக்கம் வைத்து வரவேற்ற 'பாலிவுட் ஸ்டார்' ஷாருக்கான்

Yogi Babu in Jawan - 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்துக்கு பிறகு, 12 ஆண்டுகள் கழித்து, 'ஜவான்' படப்பிடிப்பு தளத்தில் யோகி பாபுவை, வணக்கம் சொல்லி வரவேற்று இருக்கிறார் 'பாலிவுட்' நடிகர் ஷாருக்கான்.

Update: 2022-11-10 07:22 GMT

yogi babu in jawan -  அட்லி இயக்கும் ‘ஜவான்’ படத்தில், ‘பாலிவுட்’ நடிகர் ஷாருக்கான் உடன் நடிக்கிறார் யோகிபாபு.

Yogi Babu in Jawan -தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் யோகி பாபு, தற்போது தமிழில் 'வாரிசு', 'ஜெயிலர்'  படங்களில் நடித்து வருகிறார். மேலும் 'மண்டேலா', 'தர்மபிரபு', 'கூர்கா'  படங்களில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


படத்தின் நாயகனாக நடிக்காமல், கதையின் நாயகனாக எந்த நடிகர் நடித்தாலும் அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். அதனால்தான், சாதாரண நடிகர் நடிக்கும் படங்கள் கூட மாபெரும் வெற்றியை சில நேரங்களில் பெற்றுவிடுகிறது. 'மண்டேலா' படத்தை, அதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம். அதில், மரத்தடியில் சலுான் கடை நடத்தும் ஒரு ஏழை சவரத்தொழிலாளியாக, யோகிபாபு நடித்திருப்பார். 

'காக்கா முட்டை' படத்தில், சில காட்சிகளே வந்தாலும், யோகிபாபு காமெடி நடிப்பு ரசிக்கப்பட்டது. அதேபோல், 'கோலமாவு கோகிலா' படத்தில், கதாநாயகி கோகிலா (நயன்தாரா) வை, ஒருதலையாக காதலிக்கும் மளிகைக்கடை உரிமையாளராக அசத்தி இருப்பார் யோகிபாபு. அதில், க்ளைமேக்ஸ் காட்சியில், வேனில் 'நோயாளி'யாக நடித்து ஏமாற்றும் சரண்யாவை அழைத்து செல்வது, வில்லன் மற்றும் அடியாட்களிடம் சிக்கிக்கொண்டு அடிபடுவது போன்ற காட்சிகளில், ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்திருப்பார் யோகிபாபு.

இதுபோன்று, பல படங்களில் தனது முத்திரை நடிப்பால், தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு.  


இதனை தொடர்ந்து, தற்போது பாலிவுட்டில் இயக்குநர் அட்லி இயக்கத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'ஜவான்' படத்தில் யோகி பாபு நடித்து வருகிறார். இதற்கு முன், 2013 ம் ஆண்டு, ஷாருக்கான், தீபிகா படுகோன் ஆகியோரது நடிப்பில், பாலிவுட்டில் வெளிவந்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில், யோகி பாபு ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் யோகி பாபு, ஷாருக்கானுடன் நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார். அதாவது யோகி பாபு, 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பைக்குச் சென்றிருக்கிறார். அங்கே, படப்பிடிப்புத் தளத்தில் ஷாருக்கான், யோகி பாபுவை பார்த்து 'வெல்கம் பேக் டூ பாலிவுட் ஆப்டர் 12 இயர்ஸ்" எனக் கூறி, வணக்கம் வைத்து வரவேற்றிருக்கிறார்.


பல ஆண்டுகளுக்கு முன்பு 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்த யோகி பாபுவை, இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஷாருக்கான் ஞாபகம் வைத்திருந்தது,  யோகி பாபுவை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

அட்லி இயக்கி வரும் 'ஜவான்' படத்தில் யோகி பாபு, நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி ஆகியோர் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு 2023 ம் ஆண்டு, ஜூன் மாதம் 2 ம் தேதி வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News