கமல் பிறந்தநாளில் 'விக்ரம்' வெற்றிவிழா கொண்டாட்டம்

Vikram Movie 100th Day Celebration - கமல் நடிப்பில், மெகா ஹிட் வெற்றி பெற்ற 'விக்ரம்' படத்தின், 100வது நாள் விழா, கமல் பிறந்தநாளில் கொண்டாடப்படுகிறது.

Update: 2022-10-28 07:06 GMT

vikram movie 100th day celebration  - கமல் பிறந்த நாளில், ‘விக்ரம்’ வெற்றி விழா கொண்டாட்டம்.

Vikram Movie 100th Day Celebration -  உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜுன் மாதம் வெளியான திரைப்படம் 'விக்ரம்'. பெரிய எதிர்பார்ப்புடன் முக்கிய நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம், சிறந்த விமர்சனங்களைப் பெற்று, மக்களிடையே பேராதரவை பெற்றது. அதன்படி 'விக்ரம்' திரைப்படம், உலகளவில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.


உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய 'பிளாக்பஸ்டர்' வெற்றியை பெற்றது 'விக்ரம்'. நீண்ட நாட்களுக்கு பிறகு, மிகவும் வித்தியாசமான பாணியில், கமல் ரசிகர்கள் அவரை இந்த படத்தில் கண்டனர். அதிரடி ஆக்‌ஷன் படமாக எடுக்கப்பட்ட 'விக்ரம்'  படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா (கௌரவ வேடம்), பகத் பாசில், செம்பன் வினோத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தது.

'பான் இந்தியா' படமாக, பாக்ஸ் ஆபீஸில் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதன் பாடல்களும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்கள் இடையே பெரும் பாராட்டுதல்களை பெற்றது.


நடிகர் கமலுக்கு, இது ஒரு திருப்புமுனையான படமாக அமைந்தது. இதன் வெற்றியை அவர் பல்வேறு தளங்களில் பல்வேறு விதங்களில் கொண்டாடியதை நாம் சமீப நாட்களில் பார்த்தோம். திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்த விக்ரம் படம் மிகவும் வித்தியாசமான பாணியில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் முடிவில், ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் விக்ரம்-2-க்கான விதையும் போடப்பட்டுள்ளது என்றே கூறலாம். நடிப்பில் வித்தியாசம் காட்டிய கமலுக்கு, இந்த படம் நடிப்புக்கு நல்ல தீனியாகவும், கதைக்களமும் வித்தியாசமானதாக அமைந்தது, அவரது நடிப்பு பசிக்கு பெருந்தீனியாக அமைந்தது. தனது அசகாய நடிப்பில், க்ளைமாக்ஸில் கமல், அதகளப்படுத்தி, ரசிகர்களை அசத்தி விட்டார். படம் மாபெரும் வெற்றி பெற்றது.


இந்நிலையில், தற்போது 'விக்ரம்' திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா, நவம்பர் 7-ம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற இருப்பதாக, அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே, 'விக்ரம்' திரைப்படத்திற்கு பல்வேறு விழா வைத்து கொண்டாடி வந்த நிலையில், தற்போது 100-வது நாள் வெற்றி விழாவை கொண்டாட இருக்கின்றனர். இவ்விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாட, கமலின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான 'ராஜ்கமல் இண்டர்நேஷனல்' பட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.


அந்த அறிவிப்பில், "உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெகுவிமர்சையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற 'விக்ரம்' திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா, நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல் நடித்த படத்தின்  1௦௦ வது நாள்  வெற்றி விழாக்கொண்டாட்டம் அவருடைய பிறந்த நாளில்  நடக்க உள்ளதால் ரசிகர்கள் பெருமளவில்கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News