குடும்ப சென்டிமென்ட் நிறைந்த படமாக வெளிவரும் 'வாரிசு'

varisu movie review- அம்மா, அப்பா சென்டிமென்ட் நிறைந்த படமாக 'வாரிசு' உருவாகி இருப்பதாக, முதல்கட்ட விமர்சனத்தில் தெரிய வந்துள்ளது.

Update: 2023-01-09 07:33 GMT

varisu movie review- ‘வாரிசு’ படத்தில் ‘மாஸ்’ கெட்டப்பில் நடிகர் விஜய்.

varisu movie review, varisu first movie review- விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' படம் வருகிற 11ம் தேதி வெளியாகிறது. வம்சி இயக்கியுள்ள இப்படத்தின் 'ப்ரீ புக்கிங்'  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், 'வாரிசு' படத்தை சென்சாரில் பார்த்த நபர் படத்தின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

அதன்படி, 'வாரிசு' படத்தில் விஜய்யின் நடிப்பு மிரட்டலாக உள்ளது. எமோஷனல் காட்சிகளில் மிகச்  சிறப்பாக நடித்துள்ளார். படத்தின் கதை ஒன்றும் புதியது அல்ல, ஆனாலும் விறுவிறுப்பாக திரைக்கதை நகர்கிறது. கதாநாயகி ராஷ்மிகா மந்தனா திரையில் அழகாக தெரிகிறார்.


ரசிகர்கள் நல்ல விருந்துதான் 'வாரிசு' என்பதில் சந்தேகமில்லை.  படத்தின் ஒளிப்பதிவு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும். தந்தைக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும், தாய்க்கும் மகனுக்கும் இடையே இருக்கும் உறவை பற்றியும் எடுத்துக்காட்டியுள்ளார். குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அற்புதமாக இருக்கிறது.

படத்தின் முதல் பாதியை இன்னும் குறைத்து இருக்கலாம். அது படத்திற்கு ஒரு குறையாக அமைய வாய்ப்புள்ளது. துணை நடிகர், நடிகைகள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.


சமீபமாக, அம்மா சென்டிமென்ட், அப்பா சென்டிமென்ட், அக்கா சென்டிமென்ட் என, உறவுகளை மையப்படுத்திய படங்கள், ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெறுகிறது. அஜித் நடித்த 'வலிமை' படத்தில், 'அம்மா' சென்டிமென்ட் துாக்கலாக இருந்தது. அதே போல், 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில், அக்கா - தம்பி சென்டிமென்ட்,  'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில், அண்ணன் - தங்கை சென்டிமென்ட் மையமாக இருந்தது. 

இந்த மாதிரியான சென்டிமென்ட் படங்களுக்கு, குடும்ப பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால், குடும்பத்துடன் ரசிகர்களை, தியேட்டர்களுக்கு வரவழைக்கும் ஒரு நோக்கத்திலும் குடும்ப சென்டிமென்ட்டுகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. அந்த வகையில், 'வாரிசு' படமும் உருவாகி இருப்பது உறுதியாகி உள்ளது.


விஜய் படங்களை பொருத்தவரை, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், சில  'மாஸ்' காட்சிகளை படத்தில் இருந்தாக வேண்டும். ரஜினி படங்களை போலவே, விஜய் படங்களிலும் அது தொடரவே செய்கிறது. அந்த வகையில், 'வாரிசு' படம் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

'போக்கிரி' படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ், 14 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் இந்த படத்தில், விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார். 'கில்லி', ' சிவகாசி' 'போக்கிரி' படங்களை போன்றே, 'வாரிசு' படத்திலும், இவர்களது 'ஹீரோ - வில்லன்' காம்பினேஷன் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆக அதிக வாய்ப்புள்ளது. பிரகாஷ்ராஜ் ஒரு பன்முக தன்மை கொண்ட நடிகர். யதார்த்தமான நடிப்பை தரக்கூடியவர். வில்லன், குணசித்திரம், காமெடி என, எத்தகைய நடிப்பு என்றாலும், அதை மிக அழகாக வெளிப்படுத்துவார். அந்த வகையில், 'வாரிசு' படத்திலும் அவர் அசத்துவார் என்று உறுதியாக நம்பலாம்.

Tags:    

Similar News