வாரிசு 300 கோடி உலகமகா உருட்டு.... சீண்டிப் பார்க்கும் ப்ளூ சட்டை மாறன்!

Blue Sattai Maran Twitter-என்னது 300 கோடியா அது மிகப் பெரிய உருட்டுங்க என பேசி விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் பிரபல யூடியூப் ரிவியூவர் ப்ளூ சட்டை மாறன்.

Update: 2023-02-07 06:45 GMT

என்னது 300 கோடியா அது மிகப் பெரிய உருட்டுங்க என பேசி விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் பிரபல யூடியூப் ரிவியூவர் ப்ளூ சட்டை மாறன். 

Blue Sattai Maran Twitter-என்னது 300 கோடியா அது மிகப் பெரிய உருட்டுங்க என பேசி விஜய் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் பிரபல யூடியூப் ரிவியூவர் ப்ளூ சட்டை மாறன்.

தளபதி விஜய் நடிப்பில் கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் வாரிசு. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கிய இந்த படம் குடும்பங்கள் குதூகலிக்கும் படமாக அறிவிக்கப்பட்டு வெளியானது. இதில் வெறும் குடும்பங்களுக்கான செண்டிமென்ட் காட்சிகள் மட்டும் இல்லை. ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு. சாங் வேணுமா சாங் இருக்கு. விஜய் சார் காமெடி கூட இருக்கு என எல்லா பக்கமும் கலந்துகட்டி அடித்தார்கள். ஆனால் படத்தை பார்த்தவர்களுக்கு இது ஏதோ டிவி சீரியல் போல இருக்கிறது என தங்கள் கருத்துக்களை பகிர, படத்தின் இயக்குநரோ என்ன இப்படி சொல்லிட்டீங்க டிவி சீரியல்னா அவ்ளோ மோசமா என கொந்தளித்துவிட்டார்.

இதெல்லாம் பழைய கதை. இப்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்துக்கே சென்றுவிட்டார். ஆனால் வாரிசு திரைப்படம் திரையரங்கிலேயே ஓடி வருகிறது. விரைவில் ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்பு வெளிவந்த பிறகும் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல்.

கடந்த வாரம் 7க்கும் அதிகமான படங்கள் திரையரங்குகளில் வெளியான நிலையிலும் வாரிசு, துணிவு படங்கள் இன்னமும் ஓடி வருகிறது. வார இறுதிகளில் பல இடங்களில் இன்னமும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வாரிசு படத்தின் கலெக்ஷன் படிப்படியாக உயர்ந்து 300 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரித்துள்ள வாரிசு படத்தின் உலக அளவு கலெக்ஷன் 300 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது விஜய் நடிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் என கூறப்படுகிறது.

ஏற்கனவே பிகில் படத்தின் வசூல் 300 கோடி என பேசப்பட்டாலும் அதுகுறித்த சந்தேகம் நிலவி வருகிறது. இப்போது வாரிசு திரைப்படம் 300 கோடியை எட்டியுள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதால் பலரும் அதிர்ச்சியிலேயே இருக்கிறார்கள்.

இது நம்பும்படியாக இல்லை எனவும், உலக மகா உருட்டு எனவும் பேசி வருகின்றனர். ப்ளூ சட்டை மாறனும் இதே கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டதும் ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர். ஏற்கனவே அஜித் ரசிகர்களுக்கும் ப்ளூ சட்டை மாறனுக்கும் வாய்க்கா தகறாரு இருக்கிறது. மேலும் ரஜினி ரசிகர்களும் ப்ளூ சட்டை மாறனை எப்போது அடிக்கலாம் என்றே காத்திருக்கிறார்கள். இப்போது விஜய் ரசிகர்களையும் சீண்டி பார்க்கிறார் மாறன்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News