ஆன்டி என பதிவிட்டவருக்கு அதிரடியா பதில் சொன்ன நடிகை

Haripriya Actress- வலைதளத்தில் தன்னை ஆன்டி என ட்ரோல் செய்தவருக்கு சின்னத்திரை நடிகை ஹரிபிரியா கூலாக பதில்கொடுத்துள்ளார்

Update: 2022-07-29 06:46 GMT

Haripriya Actress- சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கும் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

சினிமா நடிகைகளை விமர்சிப்பது போலவே சின்னத்திரை நடிகைகள் பற்றிய நெகடிவ் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் வந்துகொண்டு தான் இருக்கின்றன.


கனா காணும் காலங்கள் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை ஹரிப்ரியா. சன்டிவி பிரியமானவள் சீரியல் மூலமாக அதிகம் பாப்புலர் ஆன இவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். அவருக்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகைகள் சற்று குண்டானால் அல்லது வயதானவர் போல் தெரிந்தால் அவர்களை நெட்டிசன்கள் கமெண்டுகளில் மிகவும் மோசமாக விமர்சிக்கின்றனர். அப்படி நடிகை ஹரிப்ரியாவை பார்த்து சிலர் ஆண்டி என ட்ரோல் செய்துள்ளனர்.

அதற்கு பதில் கொடுத்தம் ஹரிப்ரியா "இளமையாக இருக்க என்ன செய்ய வேண்டும் என நீங்களே டிப்ஸ் கொடுங்க" என அவரிடமே கேட்டிருக்கிறார்.


"ஆன்டியா இருந்தால் என்ன. அனைவருக்கும் வயது அதிகரிக்கும் என்பது இயற்கை, அதை எப்படி தப்பு சொல்ல முடியும். என் காலில் இருக்கும் பிரச்சனை காரணமாக என்னால் உடற்பயிற்சி செய்ய முடியாது" எனவும் தெரிவித்து இருக்கிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News