நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் சவாலில் துணிவு - வாரிசு

thunivu vs varisu box office collection tamil nadu-துணிவு, வாரிசு படங்கள் ரிலீஸ் ஆகி, ஒரு வாரமாகி உள்ள நிலையில், நூறு கோடி ரூபாய் வசூலை எட்டிப்பிடிக்க, இரு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றையொன்று முந்தி வருகின்றன.

Update: 2023-01-18 09:24 GMT

 thunivu vs varisu box office collection tamil nadu- போட்டி போட்டுக்கொண்டு வசூல் மழையில் நனைந்து வரும் வாரிசு - துணிவு ( கோப்பு படம் - நடிகர்கள் விஜய், அஜித்)

thunivu vs varisu box office collection tamil nadu- பொங்கல் பண்டிகை வெளியீடு படங்களான துணிவு-வாரிசு இரு படங்களும் வசூல் மழை பொழிந்து வருகிறது. இரண்டு படங்களும் நுாறு கோடி ரூபாய் வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.


தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நட்சத்திரங்கள் அஜித்-விஜய். எம்ஜிஆர், - சிவாஜி, ரஜினி -கமல் ஆகியோரை தொடர்ந்து, இன்றைய தமிழ் சினிமாவில் இரட்டை போட்டியாளர்களாக பேசப்படும் நடிகர்களாக அஜித் - விஜய் உள்ளனர். இவர்களின் படங்கள் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, ஒரே நாளில் ரிலீஸ் ஆனது, அஜித் - விஜய் இருவரும் நட்பாக பழகி வந்தாலும் அவர்களின் ரசிகர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவுவது இல்லை. எப்போதும் அவர்கள் டுவிட்டரில் சண்டையிட்டுக் கொண்டே தான் இருக்கின்றனர்.

கடந்த ஜனவரி 11ம் தேதி, அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு என, இருவரது படங்கள் ரிலீஸ் ஆனது.

விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும், அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு  வெளியானது. பல ஆண்டுகள் கழித்து அஜித் மற்றும் விஜய்யின் படங்கள், பண்டிகை நேரத்தில் ஒரே தினத்தில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர்.


கடைசியாக ஜில்லா மற்றும் வீரம் ஆகிய படங்கள் கடந்த 2014 ம் ஆண்டு வெளியானது. அதையடுத்து தற்போது வாரிசு மற்றும் துணிவு வெளியாகிவுள்ளது. இந்நிலையில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள வாரிசு திரைப்படம் குடும்ப கதையம்சம் கொண்ட கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.

வழக்கமான விஜய் படங்களை போல அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் நிறைந்த இப்படம் தற்போது கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. மறுபக்கம் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ஆக்சன் கலந்த திரில்லர் படமாக வெளியாகி உள்ளது.


தற்போது தமிழகத்தில் அதிக வசூல் செய்து முதல் நாளில் இருந்து முதல் இடத்திலேயே உள்ளது அஜித்தின் துணிவு. தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் அஜித்தின் துணிவு ரூ. 92 கோடியும், விஜய்யின் வாரிசு ரூ. 90 கோடியும் மொத்தமாக வசூலித்துள்ளதாம்.


அதாவது குடும்ப படமான, வாரிசுக்கு பத்து முதல் பதினைந்து டிக்கெட்டுகள் என மொத்தமாக தியேட்டர்களில் விற்பனை நடந்து வருகிறது. அதே போல், ஆக்‌ஷன் படமான துணிவுக்கு, குடும்பமாக வரும் கூட்டம் குறைவு என்றாலும், அஜித் படத்துக்கும் இன்னும் கூட்டம் குறையாமல், ஹவுஸ்புல் காட்சிகளாக நீடிக்கிறது. இன்னும் சில தினங்களில், வாரிசு மற்றும் துணிவு படங்கள் இரண்டுமே, நூறு கோடி ரூபாயை எட்டிவிடும் என்று தெரிகிறது. இது, விஜய் - அஜித் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது. 

Tags:    

Similar News