உடைந்தது சஸ்பென்ஸ்; வெளிச்சத்துக்கு வந்த 'துணிவு' படத்தின் கேரக்டர்கள்

thunivu movie characters- விஜய் நடித்த ‘வாரிசு’ படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்ததால், அஜித் நடித்த ‘துணிவு’ படத்தின் கேரக்டர்களை படக்குழு வெளியிட்டு, ‘தல’ ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Update: 2022-12-31 09:12 GMT

thunivu movie characters-‘துணிவு’ படத்தின் கேரக்டர்கள் பற்றிய தகவல் வெளியானது.

thunivu movie characters, thunivu movie latest news- இயக்குநர் ஹெச் வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி இருக்கும் துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் அஜித் தனது படத்திற்கான பிரமோஷனில் எப்போதுமே கலந்து கொள்ள மாட்டார். இப்போது துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு படம் வெளியாகிறது.

ஆகையால் சமீபத்தில் பிரம்மாண்டமாக வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடைபெற்றது. எனவே இப்போது துணிவு படத்தைக் காட்டிலும் வாரிசு படத்திற்கு தான் எதிர்பார்ப்பு சற்று அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு துணிவு படக்குழு அந்தப் படத்தின் கேரக்டர்களை ஒவ்வொன்றாக வெளியிட்டுள்ளது.


இதனால் படத்தின் சஸ்பென்ஸ் வெளியாகி உள்ளது. மேலும் இதில் யார் நடிக்கிறார்கள் என்ன கதாபாத்திரம் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. .

அதன்படி, முதலாவதாக பிரபல நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் துணிவு படத்தில் மைபா எனும் தொலைக்காட்சி செய்தியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக போஸ்டர் வெளியாகி உள்ளது.

இவரைத் தொடர்ந்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் பிரேம் துணிவு படத்தில் பிரேம் என்ற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியின் நடுவுல கொஞ்சம் பார்க்காத காணும் படத்தின் மூலம் பிரபலமான பக்ஸ் இந்த படத்தில் ராஜேஷ் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜான் கொக்கன் துணிவு படத்தில் க்ரிஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் வீரா இந்த படத்தில் ராதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் துணிவு படத்தில் ஜி எம் சுந்தர் நடிப்பது ஏற்கனவே அனைவரும் அறிந்த விஷயம் தான். இந்த படத்தில் முத்தழகன் என்ற கேரக்டரில் இவர் நடித்துள்ளார்.


நடிகர் அஜய், ராமச்சந்திரன் என்ற போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரகனி துணிவு படத்தில் போலீஸ் தயாளன் என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். கடைசியாக துணிவு படத்தின் கதாநாயகி மஞ்சு வாரியர் கண்மணியாக நடித்துள்ளார். இந்த கேரக்டர் போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இப்போதைய சூழலில், பிரபலமான டிவி சேனல்களில் முக்கிய நடிகர்களின் ஆடியோ லாஞ்ச் விழாவை, படத்தின் பிரமாண்ட வெற்றிவிழா போல, காட்சிப்படுத்தி ஔிபரப்பு செய்கின்றனர். அதில் படத்தின் ஹீரோ, ஹீரோயின், டைரக்டர், மியூசிக் டைரக்டர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று பேசுகின்றனர். இது, ஒரு விளம்பர யுக்திதான். இது, ரசிகர்களை மட்டுமின்றி, மற்ற தரப்பு மக்களையும் தியேட்டர்களுக்கு வரவழைக்கும் ஒரு முயற்சிதான்.


200 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்பட்ட படம், ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் தர வேண்டும் என்றால், அதற்கு, லட்சக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர்களில் குவிய வேண்டும். ஆயிரக்கணக்கில், செலவு செய்து டிக்கெட் எடுத்து படம் பார்த்தால்தான், தியேட்டர்களில் உள்ள கஜானா பெட்டிகளும் நிரம்பும். அப்போதுதான் ஹீரோக்களும், நுாறு கோடி ரூபாய்க்கு மேல், அடுத்தடுத்த படத்தில் சம்பளம் வாங்க முடியும்.

எனவே, வாரிசு படத்துக்கு ஆடியோ லாஞ்ச் மூலம் கிடைத்த வரவேற்பால், தங்களது படத்தின் வெற்றி வாய்ப்பு குறையக்கூடாது என்பதற்காக, துணிவு படத்தின் கேரக்டர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளதாக, சமூகவலை தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், தனது படத்தின் வெற்றிக்காக, இதுபோன்ற விளம்பர யுக்திகளில் ஒரு போதும் ஈடுபடாமல், 'ஜென்டில்மேன்' ஆக இருப்பவர் நடிகர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.   

Tags:    

Similar News