பொன்னியின் செல்வன், கேஜிஎப் படங்களை பின்னுக்கு தள்ளிய 'துணிவு'

thunivu beat kgf 2 collection- பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன ‘ துணிவு’ படம், பொன்னியின் செல்வன், கேஜிஎப் 2 படங்களின் வசூலை காட்டிலும், அதிகமாக வசூலித்து, சாதனை படைத்து, வெற்றி வாகை சூடியுள்ளது.

Update: 2023-01-27 08:58 GMT

thunivu beat kgf 2 collection- நடிகர் அஜித்குமார்.

thunivu beat kgf 2 collection, thunivu collection till now- அஜித் நடிப்பில், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, இந்த பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம் 'துணிவு'. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் துணிவு படம் தஞ்சாவூரில் உள்ள ஜிவி திரையரங்கில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.


கடந்த 38 ஆண்டுகளில் அதிகம் வசூல் செய்து முதலிடத்திற்கு 'துணிவு' படம் வந்துள்ளது. அதோடு 'பொன்னியின் செல்வன்', 'கே ஜி எப் 2' ஆகிய படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம், உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவருமான அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் துணிவு. வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.


ஜிப்ரான் இசையமைத்த இந்த படத்தை எச்.வினோத் இயக்கியிருந்த நிலையில் போனி கபூர் தயாரித்திருந்தார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'துணிவு' படம் கடந்த ஜனவரி 11-ம் தேதி வெளியானது. கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து த்ரில்லர் பாணியில் வெளியான 'துணிவு' படம், ஐந்தே நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200 கோடியை (மொத்தம்) கடந்துள்ளது.

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பெரும் போட்டி நிலவி வரும் நிலையில், இறுதியில், இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக வரவேற்பை பெற்று வருவதால், தியேட்டர் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


இந்தப் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் தெலுங்கில் (தெகிம்பு என்ற பெயரில்) வெளியிடப்பட்டது. இது குறித்து வர்த்தக நிபுணர் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பதிவில், துணிவு உலகம் முழுவதும் ரூ. 200 கோடியைத் தாண்டியது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் சாதனை நடத்தி வருகிறது. என்று பதிவிட்டுள்ளார்.


துவக்கத்தில், 'துணிவு' படத்தை காட்டிலும், 'வாரிசு' படம், அதிக வசூல் படமாக கூறப்பட்டது. ஆனால், நாளடைவில், 'வாரிசு' படத்தை காட்டிலும், 'துணிவு' படத்துக்கு, வரவேற்பு அதிகரித்தது. அதுவும், வங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள், ரசிகர்களுக்கு அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தியது. ஆனால், 'சூரியவம்சம்' படம் போல, 'வாரிசு' படம் இருக்கும் என, அந்த படத்தில் நடித்த சரத்குமாரே, விமர்சனம் செய்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.  

இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' மற்றும் 'கேஜிஎப்' 2ம் பாகம் படங்களை காட்டிலும், தஞ்சாவூரில் உள்ள ஜிவி திரையரங்கில் அதிக வசூலை 'துணிவு' பெற்றது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News