அமீர்கானின் அடுத்தப்படம்; தமிழ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு

Tamil Director Who Directs Aamir Khan- 'கல்யாண சமையல் சாதம்' படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.எஸ் பிரசன்னாவுக்கு, இந்தி நடிகர் அமீர்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Update: 2022-10-13 06:47 GMT

tamil director who directs aamir khan- பாலிவுட் நடிகர் அமீர்கானை வைத்து படம் இயக்க உள்ளார் தமிழ்பட இயக்குனர் ஆர்.எஸ். பிரசன்னா.

Tamil Director Who Directs Aamir Khan-பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து, பிரபல இயக்குனர் ஆர்.எஸ் பிரசன்னா படம் இயக்குகிறார்.

இந்தி படவுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் அமீர்கான். தமிழில் ரீமேக் செய்யப்பட்ட இவரது படங்கள் சில, ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்பட்டது. அதேபோல், தமிழில் இயக்கப்படும் படங்கள், இந்தி உள்ளிட்ட பிறமொழிகளில் ரீமேக் செய்யப்படும்போது, மிகப்பெரிய வெற்றியை, பாராட்டை பெறுவது வழக்கம்.


அதுபோல, தமிழ்பட இயக்குனர், இந்தி பட நட்சத்திர நடிகரை வைத்து படம் இயக்க உள்ளார். பாலிவுட் நடிகர் அமீர் கானை, தமிழ்ப்பட இயக்குனர் ஒருவர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழில் இளம் இயக்குனராக இருப்பவர் ஆர்.எஸ் பிரசன்னா. கடந்த 2013-ஆம் ஆண்டு, நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான 'கல்யாண சமையல் சாதம்' படத்தை ஆர்.எஸ் பிரசன்னா இயக்கினார். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் இப்படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் பிரசன்னா, லேகா வாசிங்க்டன், டெல்லி கணேஷ் என பலருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படம் "கல்யாண சமையல் சாதம்". பிரசன்னாவுக்கும், லேகா வாசிங்க்டனுக்கும் அவர்களது பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன் இருவரும் நெருங்கி பழகி வருகின்றனர். அப்போது ஒரு நாள் இருவரும், உறவு வைத்துக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். ஆனால் பிரசன்னாவால் அது இயலாமல் போகிறது. லேகா வாசிங்க்டனும் அவரது தந்தையும் இணைந்து, பிரசன்னாவின் பிரச்சனையை எப்படி சரி செய்கிறார்கள் என்பதே இத்திரைப்படத்தின் கதை.

ஆண், பெண் உறவுக்கிடையே நிகழும் முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து எந்த முகம் சுளிக்கும் காட்சிகளும் இல்லாமல் மிகவும் ரசிக்கும்படி இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார் ஆர் எஸ் பிரசன்னா. எனினும் இத்திரைப்படம் சரியாக கைக்கொடுக்கவில்லை.


இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்தார் ஆர் எஸ் பிரசன்னா. "சுப மங்கள் சாவ்தான்" என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, பூமி பெட்னேகர் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழை விட இந்தியில் ரசிகர்கள், இந்த படத்துக்கு பெரிய வரவேற்பை கொடுத்தனர். இதனால் இயக்குனர் பிரசன்னாவுக்கு, இந்தி படவுலகில் மவுசு அதிகரித்தது.

 தற்போது ஆர் எஸ் பிரசன்னா, அமீர்கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். அதாவது அமீர்கான் நடிப்பில் வெளிவந்த "லால் சிங் சத்தா" திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கை ஆர் எஸ் பிரசன்னாதான் கவனித்துக்கொண்டாராம். இந்த நட்பின் காரணமாக இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

பிரசன்னா சொன்ன கதை அமீர்கானுக்கு மிகவும் பிடித்துவிட்டதால், இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும், இப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags:    

Similar News