உணவு விநியோகம் செய்வோரின் வாழ்க்கைச் சிரமங்களையும் உணர்வுகளையும் விவரிக்கும் 'ஸ்வீட் பிரியாணி'

52-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இயக்குநர் கே. ஜெயச்சந்திர ஹாஷ்மி

Update: 2021-11-25 15:11 GMT

'கலை என்பது மனம் வாடியிருப்பவர்களைத் தேற்ற வேண்டும். வசதியான வாழ்க்கை முறை உள்ளவர்களின் மனதில் உறுத்தலை ஏற்படுத்த வேண்டும்' என்று ஒரு புகழ்மிக்க மேற்கோள் உள்ளது. சாதி, வகுப்பு, மற்றும் பிற அதிகார நிலைகள் மூலம், சமூகத்தில் வசதியைப் பெற்றிருக்கும் மக்கள் மனதில் இந்தத் திரைப்படம் உறுத்தல் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். கோவாவில் நடைபெறும் 52-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவிற்கிடையே இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய, ஸ்வீட் பிரியாணி என்ற திரைப்படத்தின் இயக்குநர் ஜெயச்சந்திர ஹாஷ்மி இதனைத் தெரிவித்தார்.

இந்தத் திரைப்படம் உணவு விநியோகம் செய்யும் மாரிமுத்து என்ற இளைஞனின் ஒருநாள் அனுபவம் பற்றிய கதையாகும். ஏராளமான உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்ய பயணிக்கும் அவன், உண்ண உணவில்லாத ஒரு குடும்பத்தைக் காண்கிறான். ஆனால் அவர்களுக்கு அவனால் உதவி செய்ய முடியவில்லை. இந்த முரண்பாட்டையே திரைப்படும் முன்னிறுத்துகிறது என்று ஹாஷ்மி கூறினார்.

இந்தத் திரைப்படத்தில் மாரிமுத்துவாக நடித்த சரித்திரன், படத்தொகுப்பாளர் ஜி ஏ கவுதம் ஆகியோரும் தங்களின் அனுபவங்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

Similar News