அடுத்தடுத்து 3 படங்களில் கதாநாயகனாக நடிக்கும் காமெடி நடிகர்!

Soori Next Movie-அடுத்தடுத்து 3 படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார் காமெடி நடிகர் சூரி..

Update: 2023-04-02 01:30 GMT

Soori Next Movie

Soori Next Movie-அடுத்தடுத்து 3 படங்களில் கதாநாயகனாக நடிக்கிறார் பிரபல நகைச்சுவை நடிகர். இந்த 3 படங்களில் 2 கிளிக் ஆகிவிட்டாலும் கூட ஒரு பெரிய ரவுண்டு வருவார் என கோலிவுட்டில் பேசி வருகிறார்கள். இதுதவிர இவரின் கால்ஷீட்டுக்காக 3 தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

இவரது நடிப்பில் விரைவில் ஒரு படம் திரைக்கு வரவிருக்கிறது. அது வேறு யாருமல்ல காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறியிருக்கும் நம்ம சூரிதான். இவரது நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சூரியின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் அவரைத் தேடி வருகின்றார்கள் என்பது லேட்டஸ்ட் தகவல்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் விடுதலை. இந்த படத்தில் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். இவர்களும் பல துணை நடிகர்களும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனால் படம் மிகவும் ரா வாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

விடுதலை படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நாயகனாக நடிக்கும் சூரிக்கு ஜோடியாக அன்னா பென் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இன்னும் இரண்டு படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறார் சூரி.

விடுதலை படத்தின் முதல் பாகம் சூரியை நாயகனாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படம் வரும் 31ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இளையராஜா இசையில் சிறப்பாக படம் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.

கொட்டுக்காளி தவிர விக்ரம் சுகுமாறன் இயக்கும் புதிய படம் மற்றும் அமீர் இயக்கும் புதிய படம் ஆகிய 3 படங்கள் தன் கைவசம் இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகர் சூரி. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News