என்னது? ஸ்ருதி ஹாசனின் சம்பளம் இவ்வளவா?

Shruti Haasan New Movie -உலகநாயகன் கமலின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசனின் தற்போதைய சம்பளம் எவ்வளவு தெரியனுமா? மேற்கொண்டு படிங்க

Update: 2022-08-19 06:03 GMT

Shruti Haasan New Movie -தமிழ் சினிமாவிற்கு 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கமலின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன்.

சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இயங்கும் ஸ்ருதிஹாசன், தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள், லேட்டஸ்ட் ஃபேஷன் நகை மற்றும் உடை என பல கிளாமரான ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அடிக்கடி பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

ஸ்ருதி ஹாசன் தற்போது மும்பையை சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக மும்பையில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது தனது காதலருடன் இன்ஸ்டாகிராமில் லைவ்வில் தோன்றி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார் ஸ்ருதிஹாசன்.

தற்போது சலார், NBK 107, வைட்டர் வீராய்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சலார் படத்தில் பிரபாஸுடன் இணைந்து நடித்து வருகிறார். கே.ஜி.எப் பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை ஸ்ருதி ஹாசன் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். இதன்முலம் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்று தெரியவந்துள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News