தீபாவளி வசூலில் அள்ளிய சர்தார், பிரின்ஸ்

Sardar VS Prince Box Office Collection-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆன படங்கள் சர்தார் மற்றும் பிரின்ஸ். இதில், சர்தார் ரூ. 47 கோடி, பிரின்ஸ் ரூ. 32 கோடி என வசூலை அள்ளிக் குவித்துள்ளது.

Update: 2022-10-26 06:03 GMT

 sardar vs prince box office collection -  வசூலில் அள்ளிய சர்தார், பிரின்ஸ்.

Sardar VS Prince Box Office Collection- தீபாவளி பண்டிகை என்றாலே, புத்தாடைகள் அணிவதும், பட்டாசுகள் வெடிப்பதும்தான். அத்துடன், குடும்பத்தினரோடு அல்லது நண்பர்களோடு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன புதுப்படங்களை பார்க்க செல்வதும்தான். வழக்கமாக, தீபாவளிக்கு அன்றைய காலகட்டத்தில் ரஜினி, கமல் படங்கள்தான் பெரும்பாலும் களத்தில் இருக்கும். இன்று, அது வெகுவாக குறைந்து போய்விட்டது. விஜய், அஜீத் படங்களும் தீபாவளிக்கு வருவது உண்டு. ஆனால், இந்தமுறை இருவரது படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படவில்லை. ஆனால், முன்னணி நட்சத்திரங்களான கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்கள் தீபாவளி படங்களாக வந்திருக்கிறது.

தீபாவளி பண்டிகைக்காக கார்த்தி நடித்த 'சர்தார்', சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' ஆகிய படங்கள் அனைத்து திரையரங்குகளிலும் வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படங்களின் முதல் நாள் வசூலே அபாரமாக இருந்தது.


கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோக்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரின் படங்களும் முதல்முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நாளில் வெளியானது.

இந்நிலையில் SKவின் 'பிரின்ஸ்', கார்த்தியின் 'சர்தார்' திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த நிலவரம் வெளியானது. அதன்படி, ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.7.03 கோடியும், கார்த்தியின் 'சர்தார்' ரூ.6.91 கோடியையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது. முதல் நாள் வசூலில் பின்தங்கி இருக்கும், 'சர்தார்' திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் இதுவரை நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் விரைவில் பிரின்ஸ் திரைப்படத்தை விட அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள படம் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்ததால், ரசிகர்கள் இப்படத்தை காண அதிக ஆர்வம் காட்டினர். அதை நிரூபிக்கும் வகையில், கடந்த நான்கு நாட்களில், 'சர்தார்' படம், ரூ. 47 கோடியை கடந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த படத்தின் வசூல், ரூ. 34 கோடியை கடந்துள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில், இந்த வசூல் ரூ. 50 கோடியை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேபோல், 'பிரின்ஸ்' படத்தின் வசூலும் ரூ. 32 கோடியை கடந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம், ரூ. 24 கோடியை வசூலித்துள்ளது. தீபாவளி பண்டிகை விடுமுறை தினங்களால், இன்னும் இந்த படங்களின் வசூல் இன்னும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை காலகட்டங்களில் 'டாஸ்மாக்' மதுபான விற்பனைதான் பலமடங்கு அதிகரிப்பது வழக்கம். நடப்பாண்டில் கூட, தீபாவளிக்கு மதுபான விற்பனை களைகட்டிய நிலையில், பல நுாறுகோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. அதுபோல, இதுபோன்ற பண்டிகை காலகட்டத்தில் ரிலீஸ் செய்யப்படும் புதுப்படங்களும் கோடிக்கணக்கில், வருமானம் ஈட்டி விடுவது குறிப்பிடத்தக்கது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News