600 படங்களில் நடித்த பழம்பெரும் தமிழ் நடிகை லீலாவதி காலமானார்

600 படங்களில் நடித்த பழம்பெரும் தமிழ் நடிகை லீலாவதி பெங்களூருவில் இன்று காலமானார்.

Update: 2023-12-08 14:50 GMT

நடிகை லீலாவதி.

பழம்பெரும் தமிழ் நடிகை லீலாவதி பெங்களூருவில் இன்று காலமானார். பழம்பெரும் நடிகை லீலாவதி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்  600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தமிழில் மறைந்த நடிகரும் முதல்வருமான எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் ஆகியோருடன் இவர் நடித்துள்ளார். தமிழில் இவர் பட்டினத்தார், வளர்பிறை, அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நான் அவன் இல்லை என்பது உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கன்னட சினிமா உலகில் இவர் கன்னட சூப்பர் ஸ்டார் ஆக இருந்து மறைந்த நடிகர் ராஜ்குமார் உடனும், தெலுங்கு சினிமாவில் நடிகர் என்.டி.ஆர். உடனும் நடித்துள்ளார். கன்னடத்தில் மட்டும் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்போது அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் நிலமங்களாவில் தனது மகனும் நடிகருமான வினோத் ராஜுடன் வசித்து வந்தார்.

அவருக்கு வயது 85 .உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட லீலாவதி வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்ததாக  தெரிகிறது. உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி லீலாவதி மரணம் அடைந்தார். நடிகை லீலாவதி மறைவுக்கு தமிழ் திரை உலகம் சார்பில் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News