'பொய் சொல்லவில்லை; உண்மையை மறைத்தேன்' - குஷ்பு சொன்ன புதுவிளக்கம்

Kushboo Acting in Varisu - முதலில் 'வாரிசு' படத்தில் நடிக்கவில்லை என்று கூறிய குஷ்பு, இப்போது நடிப்பதாக கூறியிருப்பது, வைரலாகி வருகிறது.

Update: 2022-10-27 08:08 GMT

kushboo acting in varisu -  நடிகை குஷ்பூ

Kushboo Acting in Varisu -விஜய் தற்போது நடித்து வரும் படம் 'வாரிசு'. அந்த படத்தில் விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், அடுத்த 2023ம் ஆண்டில், பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகிறது.


சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக, 'வாரிசு' படத்தின் சில புகைப்படங்கள் ரிலீஸ் ஆனது. அவை இணையத்தில் தற்போது, வைரல் ஆகி வருகின்றன. அதில் குஷ்பு நடிப்பதும் உறுதியாக்கும் வகையில், ஒரு போட்டோ வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் 'வாரிசு' படம் பற்றி குஷ்பூ சொன்ன பொய், தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு முன்பே போட்டோ வெளியானபோது 'நான் விஜய்யை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த போது, எடுத்த போட்டோ அது. நான் 'வாரிசு' படத்தில் நடிக்கவில்லை' என கூறி இருந்தார்.


தற்போது உண்மை தெரியவந்துவிட்ட நிலையில் அது பற்றி குஷ்பூ விளக்கம் அளித்திருக்கிறார். "தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரட்டும் என காத்திருந்தேன். அதனால்தான் நான் எதுவும் சொல்லவில்லை" என குஷ்பூ கூறி இருக்கிறார்.

அதாவது, குஷ்பூ என்ன சொல்கிறார் என்றால், 'நான், வாரிசு படத்தில் நடிக்கவில்லை என்று சொன்னது பொய் இல்லை; நான் பொய் சொல்லவே இல்லை; ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வரட்டும் என காத்திருந்ததால், உண்மையை மறைத்தேன், அதனால்தான் எதுவும் சொல்லவில்லை' என்பது, குஷ்பூவின் மறைமுக ஒப்புதலாக இருப்பதால்,  அவரை நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து வருகின்றனர்.


'குஷ்பூவுக்கு கோவில் கட்டியதெல்லாம் அந்த காலம்; இன்னும், 30 ஆண்டுகள் பின்தங்கியே இருக்கிறாரா குஷ்பூ? இன்னும் ஹீரோயின் நினைப்பிலேயே குஷ்பூவை ரசிகர்கள் பார்ப்பதாக அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார் போலும். 'வாரிசு' படத்தில் அக்காவாக, அம்மாவாக அல்லது ஏதாவது ஒரு கேரக்டரில் நடிக்க போகிறார் குஷ்பூ. அல்லது படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யாருக்கேனும் மனைவியாக நடிக்க வாய்ப்புள்ளது. அவர்தான் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதில்லை. சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீரஞ்சனி, மீரா, ரேணுகா என யார் வேண்டுமானாலும் நடிக்கும் நடுத்தர வயது பெண்மணிக்கான ஒரு கேரக்டராக தான் குஷ்பூ கேரக்டர் இருக்க கூடும். அதற்கு எதற்கு குஷ்பூ இவ்வளவு 'பில்டப்' தருகிறார் என தெரியவில்லையே,' என, நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


'வாரிசு' படத்தில் நடிப்பது அவருக்கே தெரியாமலா, அவர் படப்பிடிப்புக்கு தளத்துக்கு சென்றார்? படப்பிடிப்பு தளத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்? அதை துவக்கத்திலேயே ஒத்துக்கொண்டு , 'ஆமாம், வாரிசு படத்தில் நடிக்கிறேன்' என, உண்மையை சொல்லி இருந்தால், இத்தகைய 'நெகடிவ்' விமர்சனங்களை சுலபமாக தவிர்த்திருக்கலாம் என, குஷ்பூவின் நலம்விரும்பிகள் கூறி வருகின்றனர். ஒருவேளை, இதுவும் படத்தின் விளம்பரத்துக்கான ஒரு யுக்தியாகவும் இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News