லேட்டஸ்ட் 'கிளிக்' புகைப்படங்களில் அசத்தும் 'பிக்பாஸ்' ஜனனி

Bigg Boss 6 Janany Viral Photos-'பிக்பாஸ்' சீசன் 6 நிகழ்ச்சியில் 'யாழ்ப்பாண' தமிழில், கொஞ்சும் மொழியில் 'கதைக்கும்' போட்டியாளர் ஜனனியின் 'க்யூட்' புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Update: 2022-10-15 09:44 GMT

Bigg Boss 6 Janany Viral Photos

Bigg Boss 6 Janany Viral Photos-விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி, கடந்த 9ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கியது. நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ளனர். இதில் தெரிந்த முகங்களும் உண்டு; இதுவரை பலருக்கும் அறிமுகம் தெரியாத முகங்களும் உண்டு.

ஆண்டுதோறும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆர்வமாக  பார்த்து ரசிக்கின்றனர். விஜய் டிவியின் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சி, இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சீசன்களில் பல்வேறு விதமான நிகழ்வுகளை ரசிகர்கள் பார்த்துள்ளனர். வித்தியாசமான பின்னணியில், வித்தியாசமான இடங்களில் இருந்து, வித்தியாசமான நாடுகளில் இருந்து ஒரே இடத்தில் ஒன்றுகூடும் போட்டியாளர்கள், அவர்களுக்கிடையிலான உணர்ச்சிகளின் கூட்டணி என்பதை மையமாக கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

வழக்கமாக சினிமா பிரபலங்கள், சீரியல் நடிகர்கள், டிவி சேனல் தொகுப்பாளர்கள், மாடலிங் துறை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய நிலையில் இந்தமுறை, பிக்பாஸ் 6 சீசனில் பொதுமக்களும் பங்கேற்கும் வாய்ப்பை விஜய் டிவி வழங்கியது. அதன் அடிப்படையில், 'டிக்டாக்' பிரபலம் தனலட்சுமி, மாடல் நிவாஷினி உள்ளிட்டவர்கள் ஆடிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், இலங்கை செய்தி வாசிப்பாளர் ஜனனி ஒரு போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி, டிவி செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிபவர். இவரும் 'டிக்டாக்' வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தவர். இலங்கை தமிழ் மக்களையும் கவரும் வகையில் ஜனனியை பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இணைத்துள்ளது விஜய் டிவி.

முன்னதாக நடைபெற்ற 'பிக்பாஸ்' சீசன்களில் இலங்கையை சேர்ந்த தர்ஷன், லாஸ்லியா போன்றவர்கள் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியா - கவின் ஜோடியால், அந்த சீசன் பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. தர்ஷன், துவக்கத்தில் இருந்தே, திறமையான போட்டியாளராக வலம் வந்து, ரசிகர்களை கவர்ந்தார். 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என்ற அடிப்படையில், வின்னர் தர்ஷன் என, மக்களும், சக போட்டியாளர்களும் கூறிவந்த நிலையில், முகின் வின்னராக அறிவிக்கப்படார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய 'பிக்பாஸ்'  சீசன் 6 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே, போட்டியாளர்களுக்குள் சண்டை தொடங்கிவிட்டது. அதிலும் ஜி.பி.முத்து நிகழ்ச்சி ஆரம்பித்த அன்று சந்தோஷமாக இருந்தார், அடுத்தடுத்து அவர் சில சண்டைகளால் மனம் உடைந்து அழவே ஆரம்பித்துவிட்டார். அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

இந்நிலையில், போட்டியாளர்களில் ஒருவரான ஜனனியின் அழகிய  புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 'வெஷல் வாஷிங் டீம் கிளப்' தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனனி, 'பிக்பாஸ்' வீட்டுக்குள் வந்த சில தினங்களிலேயே பார்வையாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுவிட்டார். அவரது சிறந்த அழகும், 'யாழ்ப்பாண' தமிழில் அவர் 'கதைக்கிற' அழகும் பலரையும் கவர்ந்து விட்டது. சிறிய வயது பெண்ணாக இருந்தாலும், அவரது பேச்சில் தெளிவும், புரிதலும் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது. அவரது புகைப்படங்களும் தற்போது ரசிகர்களால் அதிகளவில் ரசிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 


Tags:    

Similar News