பிக்பாஸ் 6 வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறியது மணிகண்டாவா?

bigg boss 6 this week eliminated contestant- பிக்பாஸ் 6 வீட்டிலிருந்து இந்த வாரம் மணிகண்டா வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-12-31 06:42 GMT

bigg boss 6 this week eliminated contestant- விஜய் தொலைக்காட்சிக்கு மிகவும் ஹிட்டான ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக்பாஸ் அமைந்துள்ளது. அதனாலேயே முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 6 சீசன்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. 

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் வழக்கம்போல் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 போட்டியாளர்கள் 12வது வாரத்தை தற்போது முடித்துள்ளனர். கடந்த வாரம் இறுதியாக ஏடிகே, அமுதவாணன், அசீம், கதிர்ரவன், மைனா, விக்ரமன், ரசிதா, ஷிவின் மற்றும் மணிகண்டன் ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தனர். தனலட்சுமி கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சமீபத்திய போட்டியாளர் ஆவார். தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் எந்த ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்கவில்லை. அதுமட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்திலும் புகைப்படங்களை வெளியிடவில்லை. இதற்கு காரணம் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த வார நாமினேஷன் பட்டியலில் 9 பேர் இருந்த நிலையில், இதில் உள்ள 8 பேருமே இந்த வார நாமினேஷன் பட்டியலில் சிக்கினர். இதில் ரக்‌ஷிதா மட்டும் தப்பித்து உள்ளார். இதனால் அவர் கண்டிப்பாக இந்த வாரம் எலிமினேஷன் ஆக வாய்ப்பு இல்லை.

அதாவது இப்போது விக்ரமன், அசீம், ஷிவின், மைனா நந்தினி, மணிகண்டன், ரக்ஷிதா, ஏ டி கே, கதிரவன், அமுதவாணன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் தற்போது உள்ளனர். இதில் ரக்ஷிதா இந்த வார தலைவர் என்பதால் அவரை தவிர மற்ற அனைவருமே அடுத்த வாரம் எலிமினேஷனில் தேர்வாகியுள்ளார்கள்.

இதிலிருந்து யார் எலிமினேஷன் ஆவார் என்ற பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. விக்ரமன், அசீம், ஷிவின் மூவரும் கண்டிப்பாக காப்பாற்றப்படுவார் என்பது அனைவரும் அறிந்து அதுதான். இவர்களைத் தொடர்ந்து கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோருக்கு ஓரளவு ஆதரவு உள்ளது.

bigg boss tamil 13th week nominated contestants

இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவானன், ஏடிகே, மணிகண்டா எலிமினேஷனுக்கு நாமினேட் ஆனார்கள். தற்போது பிக்பாஸ் தமிழ் 6வது சீசனின் 12வது வார எலிமினேஷனை காண அனைவரும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிகண்ட ராஜேஷ் வெளியேற்றப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஞாயிறு எபிசோடில் மணிகண்ட ராஜேஷை கமல்ஹாசன் வெளியேற்றப் போகிறார்.

ஆனால், ராஜேஷின் வெளியேற்றம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் புதுப்பிப்புகளுக்கு இந்த இடத்தைப் பார்க்கவும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News