வெப் தொடரில் நடிக்கும் இலியனா: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

Actress Ileana - வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் நடிகை இலியானாவும் வெப் தொடரில் நடிக்கிறார்.

Update: 2022-09-13 05:47 GMT

Actress Ileana - - நடிகை இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை இலியானா, தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

கடந்த 2006ம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழில் நுழைந்தார். பின்னர் தமிழ் படங்களில் பெரிதாக நாட்டம் செலுத்தவில்லை. இருந்தாலும் 2012 ம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார்.

ileana dcruz new web series

இந் நிலையில் நடிகை இலியானாவும் வெப் தொடரில் நடிக்கிறார். வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் முன்னனி நடிகர், நடிகைகளின் பார்வை அதன் பக்கம் திரும்பியுள்ளது. நடிகர், நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க தொடங்கிள்ளனர். பேமிலிமேன் 2 வெப் தொடர் நடிகை சமந்தாவுக்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது. இதன் மூலம் அவருக்கு இந்தி பட வாய்ப்புகளும் குவிந்தன. இதுமட்டுமல்லாமல் சினிமாவில் மார்க்கெட் இன்றி ஒதுக்கப்பட்ட நடிகர், நடிகைகளுக்கும் வெப் தொடர்கள் தான் கைகொடுக்கின்றன.

சமீபகாலமாக இலியானாவுக்கு படங்கள் இல்லை. இதனால் வெப் தொடருக்கு வந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் தயாராகும் இந்த தொடர் பற்றிய முழு விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News