சென்னை கோவிலில் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம்..! பட பூஜையா..?

Hansika Motwani visited famous Kaligambal Temple for Kannan R emotional horror thriller movie-திருமணம் செய்துகொண்டாலும் ஹன்சிகா தொடர்ந்து சினிமாவில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இன்னும் பல படங்களை கையில் வைத்துள்ளார்.

Update: 2022-11-14 06:39 GMT

சாமி தரிசனம் செய்யும் நடிகை ஹன்சிகா.

Hansika Motwani visited famous Kaligambal Temple for Kannan R emotional horror thriller movie-தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக 2000-ம் ஆண்டுகளில் பிரபலமான 'சக்கலக்க பூம் பூம்' தொடரில் கருணா எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்னர் ஹன்சிகா, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கோலிவுட்டில் பிரபலமடைந்தார்.

பின்னர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய்யுடன் வேலாயுதம், சூர்யாவுடன் சிங்கம்-2, ஜெயம் ரவியுடன் போகன், சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் ஓகே ஓகே, சிம்புவுடன் வாலு ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்களிடம் நல்ல பெயரை வாங்கினார்.


ஹன்சிகா மோத்வானி தன்னுடைய குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவை வருகி டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெய்ப்பூர் நகரத்தில் உள்ள பழமை மிகுந்த மண்டோடா ஃபோர்ட் அரண்மனையில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

தனிப்பட்ட முறையில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகும் நடிகை ஹன்சிகா தன்னுடைய நடிப்புத் தொழிலை விடாமல் தொடர்ந்து நடிக்க உள்ளதாக தெரிகிறது.

தற்போது ஹன்சிகா பிஸியான நடையாகவே உள்ளார். அவர் 'பார்ட்னர்', 'ரெளடி பேபி', 'மை நேம் இஸ் ஷ்ருதி', '105', 'கார்டியன்' மற்றும் ' MY3' ஆகிய படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

Hansika Motwani visited famous Kaligambal Temple for Kannan R emotional horror thriller movie

இந்த சூழ்நிலையில்,நடிகை ஹன்சிகா சென்னையில் உள்ள பிரபலமான காளிகாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய ஹாரர் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்ததாக தெரியவந்துள்ளது. நடிகை ஹன்சிகாவுடன் இயக்குனர் கண்ணனும் உடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தார்.


இந்த படத்தை ஆர்.கண்ணன் இயக்கஉள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப் பயிற்சியை ஸ்டண்ட் சில்வா கவனித்துக்கொள்கிறார்.இந்த படத்தில் ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், ஆகிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை ஹன்சிகா நல்ல உள்ளம் கொண்டவர். துன்பப்படுவோருக்கு உதவும் நல்ல மனம் படைத்தவர். அவர் பலருக்கு கல்வி உதவி வழங்கி வருகிறார். அதேபோல மற்ற பிராணிகள் மீதும் அன்பு கொண்டவர். தெரு நாய்களை பராமரிப்பு செய்வதற்கும் அவர் உதவி செய்து வருவதாகவும் தெரிகிறது. அப்படி ஒரு நல்ல சிந்தனை கொண்ட அவர் திருமண வாழ்வில் மகிழ்ச்சியோடு வாழ நாமும் வாழ்த்துவோம்.

Tags:    

Similar News