அம்மாடியோவ்.... தலைசுத்துது..! ஹீரோக்கள் ஒரு படத்துக்கு எவ்ளோ சம்பளம் வாங்கறாங்க தெரியுமா?

மாதம் முழுக்க, இரவு பகல் பார்க்காமல் உழைக்கிற பலரோட மாத வருமானம், 25 ஆயிரம் ரூபாயை கூட தாண்டுவதில்லை.ஆனால், சில மாதங்களில் ஒரு படத்தை நடித்து முடித்துவிடும் இந்த ஹீரோ நடிகர்களின் சம்பளத்தை கேட்டால், பலரும் வாயை பிளக்காமல் இருக்க முடியாது.

Update: 2022-08-05 16:27 GMT

இன்றைய தமிழ்பட ஹீரோக்கள் வாங்கும் சம்பளம், திகைப்பை தருகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம். பிளாக் பஸ்டர் ஹிட்டான விக்ரம் படம், 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. இதேபோல் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பீஸ்ட். இந்த படம் 250 கோடி ரூபாய் வசூலித்ததாக, தகவல் வெளியானது.

இந்நிலையில், கமல்ஹாசன் மற்றும் விஜய் தங்களின் அடுத்த படங்களுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இருவருமே 130 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது வாரிசு படத்தில் நடித்து வரும் விஜய் இந்தப் படத்திற்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும், தனது அடுத்த படமான 67வது படத்திற்கு 130 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் தனது அடுத்தப் படத்திற்கு, 130 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் தற்போது, அமெரிக்காவில் உள்ளார். அவரது நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தியன் 2 படத்தை தொடர்ந்து பா ரஞ்சித் அல்லது மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என கூறப்படுகிறது.

Similar News