இசையமைப்பாளராக மாறிய இயக்குனர் மிஷ்கின்

Director Mysskin Becomes Music Director - விரைவில் திரைக்கு வரவுள்ள 'டெவில்' என்ற படத்தில், இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

Update: 2022-10-15 08:28 GMT

Director mysskin devil movie update- இயக்குனர் மிஷ்கின், விரைவில் திரைக்கு வரவுள்ள ‘டெவில்’ என்ற படத்திற்கு, இசையமைத்திருக்கிறார். 

Director Mysskin Becomes Music Director -தமிழ் சினிமா இயக்குனர்களில் மிக முக்கியமானவர் மிஷ்கின். இவரது படங்களுக்கு என, தனியாக ரசிகர் பட்டாளமே உண்டு. வித்தியாசமான கதையும், கதைக்களமும், கதாபாத்திரங்களும் இவரது ஸ்பெஷாலிட்டி. நடிகராகவும், தன் திறமையை வெளிப்படுத்தி கொண்டிருப்பவர். சித்திரம் பேசுதடி, நந்தலாலா, அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, துப்பறிவாளன், சைக்கோ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட படங்கள் இவரது இயக்கத்தில் வெளிவந்தவை. இவரது நடிப்பில், 'சவரக்கத்தி' பலரது கவனத்தை ஈர்த்த படம். 


இயக்குனராக, நடிகராக தன்னை வெளிப்படுத்திய மிஷ்கின், தற்போது இசையமைப்பாளராக, 'டெவில்' என்ற படத்தின் வாயிலாக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். 

இயக்குனர் மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்கும் புதிய படம் 'டெவில்'. இந்த படத்தில் விதார்த், பூர்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதேபோல் இயக்குனர் மிஷ்கின், இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அத்துடன், படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 'டெவில்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படம் வித்தியாசமான 'த்ரில்லர்' காட்சிகள் நிறைந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு, இசைமையப்பாளராக மாறிய மிஷ்கினின் இசை முக்கிய பங்காற்றும் என, படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய படங்களில் எப்போதும் பின்னணி இசையும், பாடல்களும் பேசுபொருளாக இருக்கும். அது இளையராஜா இசை அமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். அவரது படங்களில் இடம்பெறும் பாடல்கள், பலராலும் விரும்பி ரசிக்கப்படும்.

குறிப்பாக 'கத்தாழ கண்ணால', 'வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யணம்', 'உன்னை நெனைச்சு உருகி போனேன் மெழுகா' உள்ளிட்ட மிஷ்கின் பட பாடல்கள் என்றென்றும் ரசிக்க வைப்பவை. பாடல்களில் மட்டுமின்றி, பாடல்காட்சிகளிலும் அதிக ரசிப்பு தன்மை நிறைந்திருக்கும். 'நந்தலாலா' படத்தில், மிஷ்கின் நடிப்பு, ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றது. 'சவரக்கத்தி' படத்தில், மூர்க்கமான ரவுடியாக, நகைச்சுவை கலந்த நடிப்பால், ரசிகர்களை அசத்தியிருப்பார் மிஷ்கின். 


இந்நிலையில் அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இந்த படத்துக்கு 'டெவில்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தை மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர். ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இயக்குனர், நடிகராக தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற மிஷ்கின், இசையமைப்பாளராகவும் வெற்றி பெறுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், அவரது ரசிகர்கள், 'டெவில்' படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News