விஜய்சேதுபதியின் மைக்கேல் பட டீஸர் தனுஷ் வெளியீடு

Michael Vijay Sethupathi Teaser- விஜய்சேதுபதியின் மைக்கேல் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளா

Update: 2022-10-21 06:43 GMT

மைக்கேல் பட டீசர்.

Michael Vijay Sethupathi Teaser - விஜய்சேதுபதியின் மைக்கேல் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்கும் படம் மைக்கேல். இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி இணைந்து படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், வருண் சந்தேஷ் ஆகியோர் மற்ற முக்கிய நடிகர்கள். சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்கிறார். சத்தியநாராயணன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

michael vijay sethupathi teaser released by dhanush

மைக்கேல் படத்தில் நடிகர் சந்தீப் கிஷனின் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல். படம் அதிக ஆக்டேன் ஆக்‌ஷனுடன் அமைக்கப்பட்டுள்ளது என பட வட்டாரங்கள் மற்றும் படக்குழுவினரால் அறியப்படுகிறது. ஆனால் அப்படியொரு ஆக்ஷன் படத்தில் கொஞ்சம் காதலும் இருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது படத்தின் டீசரை நடிகர் தன் டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தின் தமிழ் டீசரை தனுஷ், ஹிந்தி டீசரை ராஜ் & டிகே, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னட டீசரை ரக்சித் ஷெட்டி, தெலுங்கு டீசரை ரகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தனுஷ் மைக்கேல் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

இந்த டீசரில், ஆக்சன் காட்சிகள் அதிகளவு இடம்பெற்றுள்ள நிலையில், ''மன்னிக்கும்போது நாம கடவுள் ஆகிறோம் மைக்கேல்'' என்ற வசனமும், ''வேட்டை தெரியாத மிருகத்தை மற்ற மிருகங்கள் வேட்டையாடிடும்'' என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதிபதி மற்றும் கவுதம் மேனன் வித்தியாசமான நடிப்பை கொடுத்துள்ளதாகவும் டீசரில் தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

டீசரில் நடிகர் சந்தீப் கிஷன் அச்சுறுத்தும் வகையில் தோற்றமளிக்கிறார் மற்றும் படம் ஒரு பொழுதுபோக்கு ஆக்‌ஷன் படமாக உறுதியளிக்கிறது. இயக்குனர்-நடிகர் கௌதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் சந்தீப் மற்றும் விஜய் சேதுபதியை எதிர்கொண்டு வில்லனாக நடிக்கிறார்.

நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மைக்கேல் படத்தின் டீசரை இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் மற்றும் ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். 

இந்த படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News