பா. ரஞ்சித் இயக்கத்தில் 'சியான்' விக்ரம் படம்; விரைவில் 'பர்ஸ்ட் லுக்' வெளியீடு

Chiyaan 61 Movie Name - இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், 'சியான்' விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' விரைவில் வெளியிடப்பட உள்ளது.

Update: 2022-10-13 07:55 GMT

chiyaan 61 movie name- ‘சியான்’ விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் புதிய படத்தின் ‘ பர்ஸ்ட் லுக்’  விரைவில் வெளியீடு

Chiyaan 61 Movie Name -இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் 'சியான் 61'. இப்படத்தின் 'பர்ஸ்ட்லுக்' விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் 'சியான்' விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கும் படம் ரசிகர்கள் மத்தியில், இப்போதே பரபரப்பை, ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது. விரைவில், வெளியாக உள்ள இப்படத்தின், 'பர்ஸ்ட் லுக்' கை, ரசிகர்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். நடிகர் விக்ரம், வித்யாசமான நடிப்பில், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். கமலுக்கு அடுத்தபடியாக, தான் ஏற்று நடிக்கும் கேரக்டருக்காக, அதிக சிரமங்களை ஏற்றுக்கொண்டு, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துபவர். கேரக்டர் சிறப்பாக அமைய, அதிகளவில் மெனக்கெடுபவர். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்களில், விக்ரமின் கடுமையான உழைப்பை காண முடியும். உதாரணமாக சேது, காசி, அந்நியன், ஐ போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.


தமிழ் சினிமாவில் நடிக்கவந்த ஆரம்ப காலகட்டத்தில், சரியான பட வாய்ப்புகளின்றி, சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர் விக்ரம். பல படங்களுக்கு, 'டப்பிங் ஆர்ட்டிஸ்ட்' ஆக, நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்தவர் விக்ரம். இயக்குனர் பாலா இயக்கத்தில், 'சேது' படத்தில் நடித்த பின்பு, விக்ரம் மிகப்பெரிய நடிகராக வெற்றி பெற்றார். முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.

அதேபோல், இயக்குனர் பா. ரஞ்சித் படங்களும் மிக வித்யாசமான கதைக்களத்தில் அமைவது வழக்கம். இவரது படங்களில், சமுதாய சிந்தனைகள் அதிகமாக காணப்படும். குறிப்பாக காலா, கபாலி, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில், அதை காணமுடியும். எனவே, 'சியான்' விக்ரமும், இயக்குனர் பா. ரஞ்சித்தும் இணையும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஆர்வத்தை துாண்டி வருகிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் விக்ரம் நடித்த 'ஆதித்த கரிகாலன்' கதாபாத்திரம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.


இதைத்தொடர்ந்து, பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது. 'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, 'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனம் சார்பில், ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்சன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.  இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை, சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், 'சியான் 61' படத்தின், 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதன் 'டெஸ்ட் ஷூட்' நடைபெற்று வருவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. 'பொன்னியின் செல்வன்' வெற்றியைத் தொடர்ந்து, 'சியான் 61' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில், அதிகரித்து வருகிறது. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News