இசைநிகழ்ச்சியில் பாடகர் தலையை பதம் பார்த்த கேமரா! என்ன நடந்துச்சு?

பென்னி தயாள் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும்போது தலையில் ட்ரோன் பட்டு சரிந்து விழுந்தார். சட்டென என்ன நடந்தது என்று தெரியாமல் பலரும் பதற்றமடைந்தனர். இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைராகி வருகிறது.

Update: 2023-03-04 08:00 GMT

தமிழ் சினிமாவின் டிரெண்ட் பாடகர்களில் ஒருவர் பென்னி தயாள். இவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பயங்கரமான ஹிட் ஆகியுள்ளன. விஜய், அஜித், சூர்யா, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுக்கு அவர்களது படங்களில் பாடியுள்ளார்.

பென்னி தயாள் தற்போது ஒரு நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருக்கும்போது தலையில் ட்ரோன் பட்டு சரிந்து விழுந்தார். சட்டென என்ன நடந்தது என்று தெரியாமல் பலரும் பதற்றமடைந்தனர். இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைராகி வருகிறது.

Full View

தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காளி, குஜராத்தி, மராத்தி என இதுவரை 3500 க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கிறார் இவர்.

சம்பவம் நடந்த இடம் சென்னை விஐடி கல்லூரி இசை நிகழ்ச்சி. கல்லூரி அரங்கில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் பல பாடல்களைத் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் பென்னி தயாள். ஊர்வசி ஊர்வசி எனத் துவங்கும் ஏ ஆர் ரஹ்மான் பாடலைப் பாடி உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார் பென்னி தயாள்.

ரசிகர்களும் உற்சாகமாக நடனமாடிக் கொண்டே பாடலை ரசித்துக் கொண்டிருந்த சமயம் சற்று பின்னாக சென்று பாட முயன்றார் பென்னி. அப்போது அங்கே பறந்தபடி இவரையும் ரசிகர்களையும் படம்பிடித்துக் கொண்டிருந்த டிரோன் கேமரா சடாரென கண் இமைக்கும் நொடியில் இவரின் பின் தலைப் பகுதியில் அடித்தது.

இதனை சற்றும் எதிர்பாராத பென்னி தயாள், உடனே கீழே அமர்ந்துவிட்டார். தனக்கு என்ன நடந்தது எதன் மீது மோதினோம் என்பது தெரிய வருவதற்குள் அவருக்கு வலி அதிகரிக்கவே அவரை பாதுகாவலர்கள் மேடையிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர். இதனால் அந்த நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டது.

பொதுவாக இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு 500 முதல் 1000 தொடங்கி 5000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும். இதனால் காசு குடுத்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் பாவம் ஏமாந்தது தான் மிச்சம்.

இப்போது பென்னி தயாள் உடல்நிலை குறித்து விசாரித்தபோது பெரிய அளவில் உட்காயம் எதுவுமில்லை என்றே தகவல் வருகிறது. இருந்தாலும் ஓய்வெடுக்கச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இசை நிகழ்ச்சிக்காக சென்ற பாடகருக்கு பறந்து கொண்டிருந்த ட்ரோனால் எதிர்பாராதவிதத்தில் காயம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. 

Tags:    

Similar News