ரோஜா சீரியல் நடிகைக்கு குழந்தை பிறப்பு.. ரசிகர்கள் வாழ்த்து..

VJ Akshaya-ரோஜா சீரியல் நடிகை விஜே அக்ஷயாவுக்கு குழந்தை பிறந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2022-11-19 07:47 GMT

VJ Akshaya

VJ Akshaya-ரோஜா சீரியல் நடிகை விஜே அக்ஷயாவுக்கு குழந்தை பிறந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் தினந்தோறும் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் பெண்களிடம் போதிய வரவேற்பை பெற்றது ரோஜா சீரியல். தற்போது இந்த சீரியல் தற்போது ரோஜா கதாபாத்திரத்திற்கு பல்வேறு சோதனைகள், கர்ப்பிணியை வாட்டி வதைக்கும் சம்பவம், குழந்தை பிறப்பு என விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த சீரியலில் பிரியங்கா என்பவர் கதையாகியாக நடித்து வரும் இந்த சீரியலில், கதாநாயகனாக சிப்பு சூர்யன் நடித்து வருகிறார். இந்த தொடரில் முதன் முதலாக வில்லி கதாபாத்திரத்தில் நடிகை ஷாமிலி குமார் நடித்து வந்தார். இவர் கர்ப்பமாக இருந்ததால் இவருக்கு பதிலாக விஜே அக்ஷயா வில்லியாக நடிக்க வந்தார்.

விஜே அக்ஷயா கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார். இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்துமே வெற்றிபெறத் தொடங்கி விட்டது.

இவர் தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிகளை காண்பதற்காகவே இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவாகியது. சன் மியூசிக் கலக்கிய அக்ஷயா சன் டிவியிலும் வணக்கம் தமிழா மற்றும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில் தான் ரோஜா சீரியல் வில்லியாக நடிப்பதற்கு விஜே அக்ஷயாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. முதலில் இவரை அணுவாக ஏற்க ரசிகர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ரோஜா சீரியல் இன்னும் பிரபலம் குறையத் தொடங்கியது.

இந்த சீரியலில் கடந்த எபிசோடுகளில் வில்லியை மையமாக வைத்தே தொடர் முழுவதும் நகர்ந்துகொண்டிருந்தது. இதனைத்தொடர்ந்து வில்லியாக நடித்த ஷாமிலி குமார், விஜே அக்ஷயா ஆகியோர் தொடர்ந்து விலகியதால், தற்போது வில்லியை விடுத்து, வில்லனை நோக்கி கதை நகர்ந்தது.  சமீபத்தில் கதாநாயகன்- கதாநாயகி இடையே ரொமான்ஸ் சீன்களும் வரத்தொடங்கியது. ரோஜா இட்டை வேடத்திலும், மற்றொரு கதாபாத்திரமாக போலீஸ் அதிகாரியை வைத்தும் கதை நகர்ந்தது என்றே சொல்லலாம்.

தனது நேர்த்தியான நடிப்பாலும் தத்துரூபமான வசனங்களாலும் ஒரு வழியாக ரசிகர்களைக் கவர்ந்து மறுபடியும் சீரியலை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார் விஜே அக்ஷயா. ரோஜா சீரியலில் நடிப்பதற்கு வரும் முன்பே இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனைத்தொடர்ந்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன் திருமண நாளில் கர்ப்பம் தரித்ததை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது விஜே அக்ஷயாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை விஜே அக்ஷயாவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவருக்கு  நடிகர், நடிகைகளும் ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News