எட்டு ஆண்டுகளுக்கு பின் அப்பா ஆன அட்லீ; குவியும் திரைத்துறையினர் வாழ்த்து

atleepriya blessed with baby boy- காதல் மணம் புரிந்த அட்லீ- பிரியா தம்பதிக்கு, எட்டு ஆண்டுகளுக்கு பின், ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்பா ஆன மகிழ்ச்சியை, தன் ரசிகர்களுக்கு பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.

Update: 2023-02-01 08:32 GMT

atleepriya blessed with baby boy- பெற்றோராக மாறிய அட்லி- பிரியா தம்பதி (கோப்பு படம்)

atleepriya blessed with baby boy- இயக்குநர் அட்லீ கோலிவுட்டின் முன்னணி இயக்குநராக திகழ்கிறார். தற்போது பாலிவுட் இயக்குநராக உருவெடுத்துள்ள அட்லீ, ஷாருக்கானை இயக்கியுள்ளார். இந்த நிலையில் வாழ்விலும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள அட்லீ விரைவில் தந்தையாக இருக்கும் விஷயத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார். இந்த நிலையில் அட்லீபிரியா தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது, இது குறித்து போட்டோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அட்லீ.


கோலிவுட்டின் கியூட் தம்பதியாக வலம் வரும் அட்லீ பிரியா தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குட்டிப்பையன் அட்லீ பிறந்துள்ள இந்த இனிய தகவலை, ரசிகர்களுக்கு சந்தோஷமாக தெரியப்படுத்திய அட்லீ கூறியதாவது " அவர்கள் சொல்வது உண்மைதான் , இது போன்ற ஒரு உணர்வு உலகில் வேறு எதுவும் இல்லை, எங்களின் ஆண் குழந்தை இங்கே உள்ளது! பெற்றோராக எங்களின் பயணம் இன்று தொடங்கியுள்ளது!" எனக் கூறி, அழகிய புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.


கடந்த 2014ம் ஆண்டில், அட்லீ - பிரியா இருவரும் காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு, பெற்றோர் ஆகியுள்ள அட்லீ-பிரியா தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.முன்னதாக பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, நடிகர் விஜய் வந்து வாழ்த்தி சென்றது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா இருவரும் காதல் திருமணம் செய்து எட்டு வருடங்கள் ஆகும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ப்ரியா கர்ப்பமாக இருப்பதை அறிவித்தனர். அதன் பின் ப்ரியாவுக்கு நடந்த வளைகாப்பில் விஜய் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


இந்நிலையில், இன்று பிரியாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது என அட்லீ அறிவித்து இருக்கிறார். இந்த விஷயத்தை அட்லீ மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார். திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில், அட்லீ- பிரியா ஜோடி புகைப்படங்களை, ரசிகர்கள் பதிவிட்டு, தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


'ராஜா ராணி', 'மெர்சல்', 'தெறி', 'பிகில்' போன்ற வெற்றிப்படங்களை வழங்கிய அட்லீ, ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது ஷாருக்கான் நடித்த 'பதான்', அபார வெற்றி பெற்று, வசூலில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்துக்கான எதிர்பார்ப்பு, மேலும் அதிகரித்துள்ளது.

அட்லீயின் மனைவியும் பிரியாவும், சினிமாவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டு சொல்வதென்றால், சூர்யா நடித்த 'சிங்கம்' படத்தில், அனுஷ்காவின் தங்கையாக, நடித்திருப்பார். இன்று, திரை பிரபலங்களான நட்சத்திர ஜோடி, பெற்றோராக மாறி இருப்பது, சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆக மாறிவிட்டது.

Tags:    

Similar News