ஆர்ஜே அர்ச்சனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Archana Tamil Actres - விஜய் டிவியில் தற்போது பிரபலமாக இருக்கும் ஆர்ஜே அர்ச்சனாவுக்கு இருக்கும் சொத்து மதிப்பு குறித்த தகவல் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்

Update: 2022-08-06 06:33 GMT

Archana Tamil Actres -கடந்த 1999ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக அர்ச்சனா பணி செய்தார். அதன்பின் சன் டிவியில் இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளில் ஆர்ஜேவாக பணிசெய்தார்.

அதன்பின் திருமணம், குழந்தை காரணமாக சில வருடங்கள் இடைவெளிவிட்ட ஆர்ஜே அர்ச்சனா, மீண்டும் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் சேனலுக்கு சென்ற ஆர்ஜே அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக மீண்டும் விஜய் டிவிக்கு வந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக அர்ச்சனா வராவிட்டாலும் கூட, அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.

தற்போது அவர் விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார். தொலைக்காட்சி மட்டுமின்றி சினிமாவிலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் ஆர்ஜே அர்ச்சனா தனது மகளுடன் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்படத்தில் நடித்தார்

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் இருக்கும் ஆர்ஜே அர்ச்சனாவின் சொத்து மதிப்பு சுமார் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News