ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் ஜோடி...! வைரலாகும் அஜித் - ஷாலினி புகைப்படங்கள்!

ஷாலினி பகிர்ந்த புகைப்படங்கள் அஜித்துடன் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்ற நாட்களில் எடுக்கப்பட்டது. அவை மிகவும் நேர்த்தியாக கடலில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

Update: 2023-03-21 10:45 GMT

நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் சென்றிருந்து வெளிநாட்டு சுற்றுலா புகைப்படங்களை தனது சமூக வலைத்தள கணக்கில் வெளியிட்டுள்ளார் ஷாலினி அஜித்குமார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


துணிவு படத்தைத் தொடர்ந்து அடுத்த படம் என்ன நடிக்கப்போகிறார் அஜித்குமார் என்பதை அறிய ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த தகவலும் வந்தபாடில்லை. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் அந்த படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டிருப்பது தெரிந்த விசயம்தான்.

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி ஒரு கதையைச் சொல்லி அஜித்குமாரின் 62 படமாக அந்த படம் உருவாக ஆரம்ப கட்ட நிலையில் இருக்கிறது. அந்த படத்தின் கதையை முழுமையாக முடித்த பிறகே அறிவிப்பை வெளியிட வேண்டும் என அஜித் தரப்பும் லைகா தரப்பும் தெரிவித்துவிட்டதால் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் நிகழாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

வங்கிகளில் நடைபெறும் மோசடிகளை அம்பலப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட துணிவு திரைப்படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு சூப்பரான கிரைம் சஸ்பெண்ஸ் திரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்குமார். இது ஸ்பை திரில்லர் வகையைச் சார்ந்த படமாக அமைகிறது.


படத்தின் அறிவிப்பு வெளியாகும் நாளில் படம் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் என்றும் இனி எல்லா படங்களிலும் இதே நடைமுறைதான் ஃபாலோ செய்யப்படும் என்றும் அஜித் தரப்பு கண்டிப்பாக இருக்கிறதாம். ஒரு படம் அறிவிக்கும்போது அது 100 சதவிகிதம் உறுதியாக நடைபெறவேண்டும் இல்லையென்றால் அறிவிப்பு ஒன்று நடப்பது ஒன்று என இருந்தால் மக்களுக்கு நம் மீது இருக்கும் நம்பிக்கை போய்விடும் என்று நினைக்கிறாராம் அஜித்குமார்.

இந்நிலையில் கடந்த மாதம் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினி ஆகியோர் இன்ப சுற்றுலா சென்றிருந்தனர். இது பர்சனலான பயணம் என்பதால் இதுகுறித்த எந்த தகவலும் மீடியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் சில புகைப்படங்கள் மட்டும் வெளியாகியிருந்தன. இந்நிலையில் ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


ஷாலினி பகிர்ந்த புகைப்படங்கள் அஜித்துடன் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்ற நாட்களில் எடுக்கப்பட்டது. அவை மிகவும் நேர்த்தியாக கடலில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த புகைப்படங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.


ஷாலினி, அஜித் இருவருமே பார்க்க ஹாலிவுட் கதாநாயகன், நாயகி போல காட்சி தருகின்றனர். கொஞ்சம் இளமையை தொலைத்திருந்தாலும் மனதளவில் என்றும் இளம் காதல் ஜோடிகளாக அன்று அமர்க்களத்தில் பார்த்த அதே அன்போடு இருக்கிறார்கள் என்பதே பலரின் கண்கள் படும் செய்தியாக இருக்கிறது. ஷாலினி அஜித்குமார் வீட்டுக்கு போனது சுத்தி போட சொல்லணும் போல. ஊரில் எல்லாரு கண்ணும் இந்த ஜோடி மீதுதான் இருக்கிறது என ரசிகர்கள் பார்த்து ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

Tags:    

Similar News