48 வயதில் கர்ப்பமாக இருக்கும் நடிகை! அவரே சொன்ன தகவல்!

Actress Sharmili-வாழ்க்கையில் தனக்கு எல்லா விசயங்களும் தாமதமாகத் தான் கிடைத்தன என்றும் குழந்தையும் தாமதமாக கிடைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார் ஷர்மிலி.

Update: 2023-06-27 11:34 GMT

Actress Sharmili-90களில் நடித்த சில நடிகைகள் அப்படியே காணாமல் போயிவிட்டார்கள். சிலர் திருமணம் முடித்து பின் மீண்டும் சினிமாவிலோ டிவியிலோ தலை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும்போதுதான் அவர்களா இது என்று தெரியவரும். அந்த வகையில் கவுண்டமணியுடன் ஜோடியாக நடித்த நடிகை ஒருவரின் செய்தி வெளியில் தெரியவந்துள்ளது.

நகைச்சுவை வேடங்களில் பல படங்களில் நடித்தவர் ஷர்மிலி. இவர் சில கவர்ச்சி வேடங்களிலும் நடித்திருக்கிறார். 13 வயதிலேயே சினிமாவில் அறிமுகமானவர் துணை கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்து திடீரென காணாமல் போயிவிட்டார். சில வருடங்களுக்குப் பிறகு அவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. 48 வயதில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அவரே தெரிவித்துள்ளார். தான் கர்ப்பமாக இருப்பதால் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்கிறேன் எனவும், இளம் வயதில் குழந்தை பெற்றிருந்தால் எப்படி வளர்த்திருப்பேன் என்று தெரியாது ஆனால் இப்போது நன்றாக வளர்த்தெடுப்பேன் என்று கூறுகிறார்.

வாழ்க்கையில் தனக்கு எல்லா விசயங்களும் தாமதமாகத் தான் கிடைத்தன என்றும் குழந்தையும் தாமதமாக கிடைத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார் ஷர்மிலி. 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News