டோலிவுட், கோலிவுட் என பற்றி எரியும் பாலகிருஷ்ணா சர்ச்சை..! நள்ளிரவில் அஞ்சலி போட்ட டுவீட்!

விஸ்வக் சென் நடிப்பில், உருவாகியுள்ள தெலுங்கு படம் கேங்ஸ் ஆஃப் கோதாவரி. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகரும் அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணா கலந்துகொண்டிருந்தார்.

Update: 2024-06-01 05:51 GMT

பாலகிருஷ்ணா பற்றி நள்ளிரவில் அஞ்சலி டிவீட் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த விசயத்தை மேலும் சர்ச்சையாக்கியுள்ளார். இதனால் படத்துக்கு பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது.

விஸ்வக் சென் நடிப்பில், உருவாகியுள்ள தெலுங்கு படம் கேங்ஸ் ஆஃப் கோதாவரி. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகரும் அரசியல்வாதியுமான பாலகிருஷ்ணா கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் மேடையில் ஏறிய பாலகிருஷ்ணா, திடீரென அஞ்சலியைப் பிடித்து தள்ளிய வீடியோ பரபரப்பாக வைரலானது. எதற்காக தள்ளினார், என்ன ஆனது என்று தெரியாமல் ஆளாளுக்கு பாலகிருஷ்ணா குறித்து விமர்சனங்களை முன் வைத்தனர்.

நடிகை அஞ்சலி தமிழில் அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, இறைவி என பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர் தெலுங்கிலும் நல்ல பிரபலமான நடிகைதான். தற்போது விஸ்வக் சென் நடித்துள்ள கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார். படம் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சர்ச்சை படத்தைப் பற்றி பலரையும் பேசவைத்துவிட்டது.

மேடையிலேயே பாலகிருஷ்ணா, அஞ்சலியைப் பிடித்து தள்ளியது அவர்களுக்கு இயல்பான ஒன்றாக கேளிக்கையாக இருந்ததை முழு வீடியோவிலும் பார்க்க முடிந்தது. அஞ்சலியும் அதனை விளையாட்டாக எடுத்துக் கொண்டு நன்றாக சிரித்திருப்பார். ஆனால் நெட்டிசன்கள் இதனை பெண்ணுக்கு எதிரான வன்முறை எனும் பார்வையில் அதற்கு பெண்ணே துணை போவது எப்படி என்று பூதாகரத்தை கொளுத்திப் போட, அந்த தீ மளமளவென எரிந்து கோலிவுட்டையும் வந்தடைந்தது.

சமூக வலைத்தளங்களில் இந்த வாரம் பாலகிருஷ்ணாதான் மெயின் டாபிக். அவரை வைத்து செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இதனை குறித்து அஞ்சலி எதுவும் பேசாமலேயே இருந்தார். அவரிடத்தில் ரசிகர்களும் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்த நிலையில், ஒரு வழியாக நள்ளிரவு நேரத்தில் அஞ்சலி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் இயக்குநரான ஹன்சல் மேத்தா, தனது பதிவில் யாரு இந்த கேவலமானவன் என ஒருமையில் பதிவிட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியடையச் செய்தார். அதேநேரம் படக்குழு தரப்பில் நடிகர் விஸ்வக் சென் இது சாதாரணமாக நட்புடன் நடந்த ஒன்றுதான். இதை ஊதி பெருசாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

நள்ளிரவில் அஞ்சலி தான் நடித்துள்ள இந்த படத்துக்கு புரமோசன் செய்து உதவிய பாலகிருஷ்ணா காருக்கு நன்றி என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் பதிவிட்டு நெட்டிசன்களை வெலவெலத்துப் போகவைத்துவிட்டார். இதுவரை பெண்ணியம், பெண்ணுரிமை பேசிய நெட்டிசன்கள் கம்முனு நம்ம வேலைய பாத்துட்டு இருந்திருக்கலாமோன்னு யோசிக்க வைத்துவிட்டார்.

அஞ்சலி, பாலகிருஷ்ணாவுடன் டிக்டேட்டர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News