ரூ. 2 கோடியில் இருந்து ரூ. 4 கோடிக்கு சம்பளத்தை உயர்த்திய நடிகை ரஷ்மிகா

அடுத்து விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தில் நடித்து வரும் ரஷ்மிகா மந்தனா, தன் சம்பளத்தை நான்கு கோடி ரூபாயாக உயர்த்திவிட்டதாக தகவல் வந்துள்ளது.

Update: 2022-08-07 13:54 GMT

நடிகை ரஷ்மிகா மந்தனா

கன்னட படம் மூலம் அறிமுகமான நடிகை ரஷ்மிகா,  விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீத கோவிந்தம் படம் வாயிலாக, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அல்லு அர்ஜுனின் புஷ்பா படம், ரஷ்மிகாவை மேலும் அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. கார்த்தி நடித்த சுல்தான் படம் மூலம், தமிழ் சினிமாவுக்குள் வந்தார். இரண்டாவது தமிழ் படத்திலேயே முன்னணி நட்சத்திரமான விஜயுடன் ஜோடியாக தற்போது நடிக்கிறார்.

புஷ்பா படத்திற்கு முன், படம் ஒன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரஷ்மிகா, இப்போது மூன்று கோடி ரூபாய் கேட்கிறாராம். மேலும் பாலிவுட் படம் என்றால், நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம் ரஷ்மிகா.

அவருக்கு மார்கெட் மவுசு அதிகம் இருப்பதால், ரஷ்மிகா சம்பளத்தை உயர்த்தி கேட்கும்போது தயாரிப்பாளர்கள் மறுப்பு தெரிவிக்காமல், கொடுக்கிறார்கள். நயன்தாரா நடிக்க வந்து பல ஆண்டுகள் கழித்தே, சம்பளமாக நான்கு கோடி ரூபாயை எட்டிய நிலையில், ரஷ்மிகா இவ்வளவு சீக்கிரமாக நான்கு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாரே என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

Similar News