நடிகர் வடிவேலுவுக்கு வாயில் விழுந்தது குத்து

சந்திரமுகி 2 படப்பிடிப்பில், வடிவேலு வாயில் ஓங்கி குத்தினார் நடிகை ராதிகா.

Update: 2022-08-10 12:59 GMT

வடிவேல் வாயில் குத்திய ராதிகா, அருகில் நடிகர் ராகவா லாரன்ஸ்.

ரஜினி நடிப்பில் பி. வாசு இயக்கிய படம் சந்திரமுகி, கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது. த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் ரஜினியுடன் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து, 16 ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குநர் பி. வாசு, சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.  படத்தில் ரஜினி கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். ராதிகா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சந்திரமுகி 2  படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மைசூரில் துவங்கி நடந்தது; படத்தின் முதல் ஷெட்யூல் நிறைவடைந்த நிலையில்,  இதனை வீடியோ பதிவிட்டு கலாட்டா செய்துள்ளார் நடிகை ராதிகா சரத்குமார். 

அந்த வீடியோவில் ராதிகாவும், ராகவா லாரன்சும் வடிவேலு வாயில் வேகமாக குத்து விடுகின்றனர். ராதிகா சற்று வேகமாக குத்த, 'என்னங்க, இப்படி குத்திட்டீங்க,' என கேட்கிறார் லாரன்ஸ். பின்னர் வடிவேலுவின் கன்னத்தை தடவி கொடுக்கிறார் ராதிகா. இந்த ஜாலியான வீடியோ வெளியிட்டு, சந்திரமுகி 2 முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நிறைவடைந்ததை தெரிவித்துள்ளார் ராதிகா. 

Similar News